நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]
Tag: Class
புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாரா என இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘நவீனகால கற்பித்தலில் பரிமாணம், சவால்கள், வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அப்போது, கல்வித்துறைச் செயலர் அன்பரசு தலைமையேற்று பேசுகையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு […]
வரும் கல்வியாண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 2012-13 கல்வி ஆண்டிலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டது. ஆனால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் […]