Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி மாநில எல்லைகள் நாளை திறப்பு; வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் – முதல்வர் கெஜ்ரிவால் தகவல்!

டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸால் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. 1500 பேரில் 27 பேர் மட்டுமே வெண்டிலெட்டரில் உள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி… ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  டெல்லியில் 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 1069 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என குறிப்பிட்ட அவர், வரும் 27ம் தேதி மறு ஆய்வுக்கூட்டம் நடைபெறும், அதில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் – முதல்வர் கேஜ்ரிவால் அதிரடி!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் (சிஏஏ) திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இஸ்லாமியர்கள், இலங்கை மக்களுக்கான குடியுரிமை சம்பந்தமாக அவர்களை சேர்க்காமல் விலக்களிக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்த அங்கித் ஷர்மா குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு!

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அரசு ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் நடந்த மோதல் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து […]

Categories

Tech |