Categories
மாநில செய்திகள்

திருச்சி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் ரூ.25.53 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? 29ம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முதல்முறையாக 3000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 47,650 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜுன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல்!

சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதித்த 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை முதல் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு விநியோகம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையம், முதலமைச்சர் பழனிசாமி அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் முதல் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் 3 பேருக்கு ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருச்சி கோ.அபிஷகபுரத்தில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகிய 3 பேருக்கும் ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபங்கள் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிமாநில நிறுவனங்களை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு!

கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : குட் நியூஸ் – தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ்!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு (2020) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.265.46 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

ரூ.265.46 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து வேலூரில் ரூ.6.35 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் ரூ.34.33 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், பாலங்களை திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 2.93 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை – முதல்வர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை என கூறியுள்ளார். முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிந்ததில் இருந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர், இருப்போர் விகிதம் குறைவாக உள்ளது. சுமார் 292 மருத்துவமனைகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு – முதல்வர் பழனிசாமி!

கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம், மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தை பாராட்டி வருகிறார்கள் என அவர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் அறிகுறிகள் இல்லாதவர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

கொரோனா காலத்தில் சேமிப்பு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை – முதல்வர் பழனிசாமி!

சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக “ஒளிரும் மாநாடு” என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை, சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு!

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, இன்று காலை […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி!

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வடசென்னையில் தொற்று பரவலை […]

Categories
மாநில செய்திகள்

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறு; விளம்பரத்திற்காக செய்கிறார் – முதல்வர் விமர்சனம்!

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு; கொரோனாவை பற்றிய அச்சம் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் கொரோனாவை பற்றிய அச்சம் தேவையில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ.235.20 கோடியில் 13 மாவட்டங்களில் துணை மின் நிலையங்கள் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் மற்றும் 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடியில் கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்கள் உட்பட பல்வேறு கட்டுமானங்களை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை – மருத்துவ குழு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், பொருளாதர வளர்ச்சி மேம்படவும் எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே ஊடங்கில் தளர்வுகள் அறிவிக்க கூடாது – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் பரவுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பணி குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை மீண்டும் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]

Categories
மாநில செய்திகள்

வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என விளக்கம் அளித்துள்ளார். இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 54.46 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவு!

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 1,750 ரூபாய் வீதம், 3,112 ஹெக்டரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி […]

Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி துறையின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி – அஞ்சு கிராமத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் ரூ.29.85 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார். நொய்யல் ஆற்றில் சரகம் 158.35 கி.மீ வரை விரிவாக்கம், புனரமைத்தல், நவீன மயமாக்கல் திட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ரூ.15 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் காணொலி மூலம் இந்த கையெழுத்திடும் பணியானது நடைபெற்றுள்ளது. ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் போன்ற நாடுகளின் இருந்து ரூ. 15,128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம் – சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 18ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனிடையே டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிக்காக 67.24 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ நிபுணர் குழுவினர் உடனான சந்திப்பை தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது; சமூக பரவலாக இல்லை – முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணை திறப்பு, குடிமராத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம் என கூறியுள்ளார். மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது, […]

Categories
மாநில செய்திகள்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் அறிவித்துள்ளார். மேலும் குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு 67 கொடியே 24 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : நாளை முதல் தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி!

தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதற்கென தமிழக அரசு சார்பில் ரூ.3,250 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா?…. முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் […]

Categories

Tech |