Categories
மாநில செய்திகள்

மேட்டூர் – சரபங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

சேலத்தில் மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலத்தின் போது வெளியேறும் வெள்ள உபரி நீரை சரபங்கா நிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்து திருப்பி விடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான ஆய்வு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர்வளத்துறை சார்பில் உபரிநீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்துக்கான […]

Categories
Uncategorized

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் … எடப்பாடி பழனிசாமி !!!

விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது,  விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார் . மேலும் விவசாயிகளின் நலம்காத்து ,குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் நிலைகள் மேம்பாடு திட்டம் ஆகியவை  அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்றும்  அறிவித்தார்.  

Categories

Tech |