தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும், தமிழ்மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் […]
Tag: #cmpalaniswami
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]
பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர், ‘ தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். […]
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]