Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் குற்றங்கள்… கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முககவசம் அணிந்திருப்பதால் காவல்துறையினரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 37 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் காளீஸ்வரன் நகரிலிருக்கும் ஒரு வீட்டில் மர்ம நபர் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி சென்ற சொகுசு கார்…. கிணற்றுக்குள் பாய்ந்ததால் நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு….!!

சொகுசு கார் பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மகளும், பிரதீப் குமார் என்ற மருமகனும் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரதீப் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்டு விண்ணப்பம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ரியல் எஸ்டேட் ஊழியரை சகோதரியின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம் பகுதியில் கிருஷ்ண பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரிக்கும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தம்மம்பதி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் சரோஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவன்யா ஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சரோஜினி தனது குழந்தை திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென பாய்ந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட தொழிலாளி…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்….!!

தொழிலாளியை கரடி கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள பாறையின் இடுக்கில் இருந்து ஒரு கரடி வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி சற்றும் எதிர்பாராத சமயத்தில் சேகர் மீது பாய்ந்து அவரை கடித்து குதறியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் சேகர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….? மனநலம் பாதித்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண் காணாமல் போய்விட்டார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டிற்குள் உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை பாலியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் வீதியில் இருக்கும் சாலையோர மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூக்கில் சடலமாக தொங்கியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரத்தால்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள தென்னைமரம் பலத்த காற்றினால் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசியதால் அதிலிருந்து தீப்பொறி பறந்துள்ளது. இதனால் அங்கிருந்த தென்னை நார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை தடுக்க நீ யார்…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்கள் இணைந்து டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனையடுத்து செந்திலின் தம்பி ரகுராமன் தனது நண்பர்களான அஜித்குமார், நாராயணன், ஆண்டனி போன்றோருடன் அந்த தோட்டத்திற்கு சென்று உற்சாகமாக மது அருந்தியுள்ளார். அப்போது செந்திலும், மணிகண்டனும் இணைந்து இங்கு வந்து நீ எப்படி மது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடித்து இழுத்துட்டு போயிருச்சு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

கரடி வாலிபரை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது நண்பர்களை பார்த்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் புதருக்குள் இருந்து குட்டிகளுடன் வெளியே வந்த கரடி பிரபாகரனை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் கரடி அவரை தாக்கி அடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து பிரபாகரனின் அலறல் சத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சீலியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தின் வாகனம் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சீரியல் பார்த்து கொண்டே… வாகனத்தை இயக்கிய வாலிபர்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டிய வாலிபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்ணாடி அருகே செல்போனை வைத்துக்கொண்டு அதில் சீரியல் பார்த்தபடி வாகனத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து ஆர்வமாக சீரியல் பார்த்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிய அந்த வாலிபரை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் ஓரமாக தானே போறேன்” வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. கோவையில் பரபரப்பு….!!

நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமி அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி அருகே சென்று கொண்டிருந்த போது சிவா மோட்டார் சைக்கிளில் அதிகமான ஒலி எழுப்பி மோதுவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே காப்பாற்றுனோம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மதுக்கடை பார் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுக்கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சாமிநாதனை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிவிட்டனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சாமிநாதன் மீண்டும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அழைக்க சென்ற போது…. அடித்து இழுத்து சென்ற விலங்கு…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வாலிபரை கொன்ற கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவியை அழைத்து வருவதற்காக இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு மோகன்ராஜ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கரடி திடீரென மோகன்ராஜை தாக்கி இழுத்து சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவரு கீழே விழுந்துட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் சேது ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேது ராஜாராம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதற்காக சென்ற காவலாளி…. புதர் மறைவில் நின்ற விலங்கு….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

யானை மிதித்து இரவு நேர காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் முத்துசாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த ஒரு யானை சற்றும் எதிர்பாராத சமயத்தில் முத்துசாமியை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அச்சத்தில் ஓடிய முத்துசாமியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதெல்லாம் கொடுக்க முடியாது” நண்பரின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் கோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் கோபால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு நின்று கொண்டிருந்த போது அவரது நண்பர் சுதாகர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுதாகர் கோபாலிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலை சரமாரியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாமல் தவித்ததால்…. வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சட்ட விரோதமாக குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒரு கேனில் கள்ளச்சாராயம் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வதம்பச்சேரி பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுந்தர்ராஜ் வருமானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் சந்திரகலா என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் சந்திரகலா தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சந்திரகலா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் கோட்டூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா விற்பனை செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திடீர்னு இப்படி பண்ணிட்டான்” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டு குட்டியை திருட முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் சங்கரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கரப்பன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சங்கரப்பனுக்கு சொந்தமான ஒரு ஆட்டு குட்டியை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அது இருக்கான்னு தெரியல…. வாகன ஓட்டிகளின் அச்சம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வேகத்தடை மீது வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடியில் இருந்த பழுதடைந்த தார் சாலையை நெடுஞ்சாலைதுறையினர் சீரமைத்துள்ளனர். இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள் நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசாமல் இருக்கின்றது. இதனால் அங்கு வேகத்தடை இருப்பது தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும்  வேகத்தடையின் மீது வர்ணம் பூசாததால் இரவு நேரத்தில் அவ்வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறி… வாலிபர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் பகுதியில் நேதாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி நேதாஜி அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வலியில் துடிதுடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பரணிதரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கோல்டு வின் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பரணிதரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார்.. இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு இங்க என்ன வேலை…? வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் காவல்துறையினர் கிருஷ்ணா காலனியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் சந்தோசை காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமபட்டினம் பகுதியில் மீன் வியாபாரியான முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற மினி லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கும் சீக்கிரம் கொடுப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்…. மாவட்ட கலெக்டரின் தகவல்…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து செவித்திறன் பாதிப்புடைய 50 பேருக்கு மாற்றுத்திறன் நல அலுவலர் வசந்தகுமார் என்பவர் செல்போன் வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பதறிய கல்லூரி பேராசிரியர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கல்லூரி பேராசிரியரிடமிருந்து தங்க நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிமுடிந்த பிறகு சாந்தி கல்லூரி வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது சாந்தியை பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து அவள் போயிட்டாள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை. கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார் இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்டரான கார்த்திக் என்பவர் இந்த சிறுமியை காதலித்துள்ளார். கடந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண் போலீஸ்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் போலீசிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பணி முடிந்து இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் தெரிந்த வெளிச்சம்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கட்டாஞ்சி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வெளிச்சம் தெரிவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது நான்கு நபர்கள் சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வனத்துறையினர் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் ஏற்பட்ட தகராறு…. நண்பரின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மணிகண்டன் பீர் பாட்டிலால் கார்த்திகை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான பொருள் இருக்கா….? அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண்…. அதிகாரிகளின் தகவல்….!!

கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் சகோதரி தற்போது கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த கர்ப்பிணி பெண் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை ஊழியர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் என்ன வேலை….? வசமாக சிக்கிய நால்வர்…. சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிலர் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருமலைச்சாமி, கணபதி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவங்களும் மிரட்டி பண்ணிருக்காங்க” சிறுமி அளித்த வாக்குமூலம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

14 வயது சிறுமியை காதலன் உட்பட 6 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் அடிச்சதுனால செத்துட்டாங்களா….? தவறுதலாக நினைத்த தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடிபோதையில் தாக்கியதால் சித்தி இறந்து விட்டதாக நினைத்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரிச்சிபாளையம் பகுதியில் ரங்கராஜ் என்ற வெல்டிங் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரங்கராஜன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் என்பவர் மதுபோதையில் இருந்த ரங்கராஜனை கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த அவர் குடிபோதையில் தனது சித்தி ராஜம்மாளை கல்லால் தாக்கியுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் நிக்கிறீங்களா….? தாய்-மகன் செய்த வேலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் சித்திக், லத்தீப் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்க்கவே அழகா இருக்கு…. தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள்…. ஆச்சரியத்தில் சுற்றுலா பயணிகள்….!!

சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் தத்ரூபமாக வன விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குரங்கு அருவி அமைந்திருக்கிறது. இந்நிலையில் வால்பாறை எஸ்டேட் மற்றும் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் மூலம் இந்த அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. தற்போது இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அருவிக்கு அருகில் தடுப்பு கம்பிகளை அமைத்து அங்கு செல்லும் சுற்றுலாப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க வைத்து பாதுகாக்க முடியல…. சீக்கிரம் சரி பண்ணுங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடங்களை பராமரிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் இருக்கின்றது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தான் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதனுள் இருக்கும் வட்டார கல்வி அதிகாரி அலுவலகமும் பழுதாகி கிடைக்கிறது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விற்பனை செய்ற மாதிரி போயிருக்காங்க…. சிக்கிய தம்பதிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வீடு புகுந்து கொள்ளையடித்த தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர்களது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகளோட வாழ்க்கை என்னாகும்” பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் மோகன்ராஜ் என்ற ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது மகளுக்கு ரத்தினம் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். ஆனால் பொருத்தமான வரன் அமையவில்லை. மேலும் பொருளாதார ரீதியிலும் மோகன் ராஜின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையை வெறுத்த ரத்தினம் தனது வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை யாராவது காப்பாத்துங்க” திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு செல்கின்றது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேர் நெல்லி துறையில் இருக்கும் படித்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 9 பெரும் ஆற்றின் நடுவே இருக்கும் திட்டு பகுதியில் நின்று கொண்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதருக்குள்ள தான் போகுது…. பார்த்ததும் அதிர்சியடைந்தவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

9 1/2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் தொழிலாளர்கள் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்குள்ள புதர்களுக்கு இடையே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 9 1/2 அடி நீளமுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த சூழல் இப்படியே இருக்கணும்” சுதந்தரமாக உலா வரும் விலங்குகள்…. வனத்துறையினரின் கோரிக்கை…!!

கோவை மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கழுதை புலி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கோவை மாவட்ட வனப்பகுதி வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட வனப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது, கழுதைப்புலி நிற்பது, சிறுத்தை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து வழக்கால் வந்த தொடர்பு…. சப்-இன்ஸ்பெக்டரின் மூர்க்கத்தனமாக செயல்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை தாக்கியதோடு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் அபிநயா என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் விவாகரத்து வழக்கை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பார்த்திபன் என்பவரின் தம்பியான வழக்கறிஞர் நடத்தி வந்துள்ளார். அப்போது அபிநயாவிற்கும், பார்த்திபனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாரு….? ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில் நிலையத்திற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு  அழைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து கோவை ரயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும், ரயில்வே காவல்துறையினரும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கு எந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி இப்படி செய்யலாமா….? பெண் அளித்த புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்தை தள்ளி வைக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி இன்ஜினியர் சுரேஷ் பாபு என்பவர் அதற்கு லஞ்சமாக 23 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெயந்தி புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ல என்ன இருக்கு….? எங்கும் பார்த்தாலும் பனிமூட்டம்… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி  பயணித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் அதிகாலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்ட படி சென்றுள்ளனர். இவ்வாறு எதிரே வரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இனிமேல் நீ பேச கூடாது” கணவரின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை சேலையால் நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி நகரில் இரும்பு வியாபாரியான செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமாதேவி அடிக்கடி செல்போனில் பேசியதால் செல்லையாவிற்கு அவரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உமாதேவி செல்போனில் தனது தோழியுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த […]

Categories

Tech |