மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விவசாய சுப்பிரமணி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பாத்தாள்(59) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கேட்டனர். இதனால் […]
Tag: Coimbatore
குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருக்கும் புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பேருந்துகளில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்த செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது. […]
கோயம்புத்தூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆட்டோக்களில் மினி நூலகம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஓய்வு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களும் புத்தகங்களை எடுத்து வாசிப்பதன் மூலம் புத்தக வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கிறது. கோவை மாநகரில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் மினி நூலகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்கள் […]
காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி […]
கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் […]
பி.டெக் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் ராம் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹயக்கிரிவ ராம்(22) என்ற மகன் இருந்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ராமிற்கு வேலை கிடைத்தது. நேற்று முன்தினம் தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அறைக்கு தூக்க சென்ற ஹயக்கிரிவ ராம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் […]
கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக புருஷோத்தமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது புதுக்கோட்டைக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அலுவலராக வேலை பார்த்த கணபதி என்பவர் பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோலையார் எஸ்டேட் […]
கோவை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வந்து இறங்கியுள்ளார். அவர் அவினாசி சாலையில் இருக்கும் சிக்னல் வரை காரில் வந்துவிட்டு திடீரென தனது இரண்டு கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டியுள்ளார். இதனையடுத்து திடீரென அந்த நபர் அரசு பேருந்தின் பின்புற ஏணியை பிடித்தவாறு சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்துள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனை சிலர் செல்போனில் வீடியோ […]
பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி […]
பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 91 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நேதாஜி நகரில் வசிக்கும் மைதீன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உறவினர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி(27) என்ற பெண்ணை சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற சிவகுமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உணவு சமைக்காமல் செல்போன் உபயோகித்து […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் நவீன் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே […]
கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ஆம் தேதி(நாளை) காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு நாளை கோழி, ஆடு மற்றும் மாடுகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும் நாளை கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் போத்தனூர், சக்தி ரோடு, உக்கடம் மற்றும் துடியலூர் […]
சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளியான சின்ன முருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் 44 நம்பர் தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென வந்த சிறுத்தை சின்ன முருகன் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றது. அப்போது முருகன் கூச்சலிட்டபடி சிறுத்தையுடன் போராடியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலக்குடி ஆற்றில் பாய்கிறது. மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று புகைப்படம் […]
14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் மற்றும் உடன்கட்டை ஏறிய சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மயிலேறிபாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாம்பு கடித்து இறந்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமுடைய நடுகல் ஆகும். இதுகுறித்து கோவை தொல்லியல் ஆராய்ச்சியாளர் தமிழ் மறவன் ரமேஷ் கூறியதாவது, இந்த வீரன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது காதல் மனைவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த […]
பொது இடங்களில் நின்று புகை பிடிப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா பொது இடங்களில் புகை படிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள், உணவு விடுதி, மருத்துவமனை வளாகம், பேக்கரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவின்பால் சொசைட்டியில் வாகன ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் அர்ச்சனா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிபாறைஎஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளியான தங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அவர் இஞ்சிபாறை எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது புதரில் இருந்து வெளியே வந்த கரடிகள் தங்கத்தை தாக்கியது. இதனால் தங்கம் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடிகளை விரட்டியடித்தனர். இதனை அடுத்து […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசுந்தர்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்த குணசுந்தர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் குணசுந்தர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் […]
பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் “உங்களை தேடி நூலகம்” என்ற பெயரில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி பூங்கா, வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ், உக்கடம் பெரியகுளம் உள்பட பல முக்கிய இடங்களுக்கு நடமாடும் நூலகம் சென்று வருகிறது. நேற்று கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எடுத்து படித்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது, […]
வாலிபர்கள் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் வியாபாரியான சதாசிவம்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, எனது கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் பொருட்கள் வாங்குவதற்காக வருவார். இந்நிலையில் வாலிபர் ஒரு நாள் அவரது நண்பருடன் எனது கடைக்கு வந்தார். அவர்கள் […]
ராணுவ பணிக்கு தேர்வான மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேயான் நகரில் டெய்லரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், வசுந்தரா(20)என்ற மகளும் இருக்கின்றனர். வசந்தரா கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பதற்காக வசுந்தரா விண்ணப்பித்துள்ளார். இதற்காக மும்பை இராணுவ தலைமையகத்தில் […]
சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கல்லூர் பகுதியில் விவசாயியான கிருஷ்ணசாமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த மாடுகள் சத்தம் போட்டதால் கிருஷ்ணசாமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை பார்த்து கிருஷ்ணசாமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு […]
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகத்தில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.நேற்று வீட்டில் இருந்த மின்விளக்குகள் எரியாததால் மோகன்ராஜ் மின்சார இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த மோகன்ராஜை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]
சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை ஆவாரம்பாளையத்தில் சரவணகுமார்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் இணைந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லனுர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சரவணன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டு கேபிள் டிவி இணைப்பை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் […]
பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் […]
கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி உட்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் சின்னமணி என்பவர் விவசாய பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்து கிணற்றிற்கு அருகில் இருந்த பம்பு செட்டில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது சின்னமணி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்து கயிற்றைப் பிடித்து மேலே […]
குளிரில் நடுங்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்ட சப்-இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையம் அருகே சாலையோர நடைபாதையில் குளிரில் நடுங்கியவாறு மூதாட்டி ஒருவர் படுத்து கிடந்துள்ளார். இதனை பார்த்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் என்பவர் சுமார் 70 வயதுடைய அந்த மூதாட்டியை மீட்டு […]
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்களுடன் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம்(44) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு எதிரே இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பாலசண்முகம் […]
தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான அந்தோணி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்கள் 2 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமட்டிபதி வழியாக செல்லும் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பெரிய மீன் தூண்டிலில் சிக்கியது. இதனால் மீனை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய அந்தோணி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் அந்த […]
சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கண்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மர்ம விலங்கு கடந்த மாதம் கடித்து கொன்றது. இதனை எடுத்து வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று அதே தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை மற்றொரு நோயை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று பார்த்து சிறுத்தையின் கால் […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பர்ராண்டி தீப சுஜிதா விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை அடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளை அகற்றி பாலன் அவரை பாலியல் பலாத்காரம் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஊட்டி- தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர் தப்பினர். ஆனால் கார் மிகவும் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை […]
காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மணிகண்டன் என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் காளியப்பம்பாளையம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சபரி கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி கார்த்திக் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]