கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் […]
Tag: Coimbatore
காரில் பயணித்தவர்கள் தவறவிட்ட 40 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் கார் டிரைவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் பாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரை ஓட்டிய போது, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என நான்கு பேர் அவரது காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கோயம்புத்தூர் […]
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அறிவொளி நகரில் முருகேஷ் என்ற சவுரிமுடி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற இரண்டாவது மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பார்வதியின் நடத்தையில் சந்தேகம் வந்தால் முருகேஷ் அவரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். […]
மாமியாருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் தண்டபாணி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ராணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தண்டபாணி இராணியின் வீட்டிற்கு வருவது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பிடிக்காத காரணத்தால் தனது தாயை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து […]
தடுப்பூசி போட்டதில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு விஜயலட்சுமி தனது குழந்தையுடன் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கு தடுப்பு ஊசி போட்ட பிறகு தாய், சேய் இருவரும் வீட்டிற்கு வந்து […]
புத்துணர்வு முகாமில் கலந்துகொண்ட நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவ குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8ஆம் தேதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுவதால், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கோவில்களை சேர்ந்த 26 யானைகள் இந்த முகாமில் கலந்து […]
பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட காரணத்தால் தி.மு.க நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் தி.மு.க கிளை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்த ஆரோக்கியராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கேட்ட காரணத்திற்காக பரோட்டா வாங்குவதற்காக அருகில் […]
தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ். புரத்தில் ராஜேஷ்குமார் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பஞ்சு குடோன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் சூப்பர்வைசராக பணியாற்றிய உமா மகேஸ்வரி என்பவர் இரவில் பணி முடித்துவிட்டு குடோனை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த […]
மகள் இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அத்த மங்கலம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷின் மூத்த மகள், அங்கு […]
புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட யானைகள் துதிக்கையால் கட்டி தழுவி தங்களது சந்தோசத்தை வெளிபடுத்தியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமானது நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இந்த […]
யானைகள் புத்துணர்வு முகாமானது பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில் யானைகள் பங்கேற்க போகின்றன. இந்த முகாமானது வருகின்ற 8ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, யானைகள் முகாமில் அலுவலகங்கள், யானைகளுக்கான […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலன் கத்தியால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொண்ணைரஜபுரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்துவருகிறார். இவர் ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு தனியார் காபி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினரான 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடத்த […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராம குரு மற்றும் ஸ்ரீ சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் […]
சசிகலாவை வரவேற்கும் வண்ணம் ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா அடைக்கப்பட்டார். இவர் கடந்த 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க தெற்கு […]
செல்போன் அடிக்கடி உபயோகிப்பதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தூரில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனுப்பிரியா ஆன்லைன் […]
பாலத்திற்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரசாமகுளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் போலீசாருக்கு இந்த குளத்திற்கு சொல்லக்கூடிய பாலத்தின் அடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து […]
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை மற்றும் பிற விவசாய தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகவான்தேவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ரஞ்சித் ஆகியோருடன் கோட்டூர் வஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் […]
யானை மிதித்ததால் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவர் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்டு பச்சாவயல்பதி என்ற இடத்திலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான ஆத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஒரு பாலத்தை […]
புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆனைமலை பகுதியில் வசித்துவரும் மூன்று பேர் செல்போனில் பேசியதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடையில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற முருகேசனுக்கு மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் […]
பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி நகரில் செந்தில் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு பிளாஸ்டிக் குடோனை கடந்த இரண்டு வருடமாக நடத்தி மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு திடீரென இந்த பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
குடிபோதையில் அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட தம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கனகரத்தினம் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுசுயாவின் தம்பி பழனிராஜா என்பவர் தனது அக்காள் வீட்டிற்கு வந்து, அங்கேயே தங்கி இருந்து கூலி […]
கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, இருவரும் நாமக்கலில் இருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா உள்ளனர். அதன்பின் அனைத்து இடங்களையும் […]
இளம் பெண் ஒருவர் பாலியல் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, சபரிராஜன் மற்றும் மணிவண்ணன் போன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த பாலியல் வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சி.பி.ஐ போலீசார் கடந்த 5 ஆம் தேதி தங்களுக்கு கிடைத்த […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம் கார்டன் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரம்யாவிற்கும் ராஜேஷிர்க்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு நடந்துள்ளது. இதனையடுத்து கோபமடைந்த ரம்யா […]
தொண்டையில் புரோட்டா சிக்கியதால் மூச்சுத்திணறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தாமஸ் வீதியில் தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் பூபாய் என்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி வேலைபார்த்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று புரோட்டா சாப்பிட்டுள்ளார் . அப்போது திடீரென அவரது தொண்டையில் ஒரு புரோட்டா சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் […]
மூதாட்டி மண்ணெண்ணை விளக்கை பற்ற வைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் தாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைக்க முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனையடுத்து அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவி விட்டது. இதனால் சாயம்மாள் வலி […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுல் ரோஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடம் படித்து […]
மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார். இவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட அவரது மனைவி பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கோபத்தில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முதியவர் […]
ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]
கிராமசபை கூட்டத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து டி.ஜி.பி மற்றும் எஸ்.பிக்கு தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பூங்கொடி என்பவர் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த ராமன், முனி, மகேஸ்வரி ஆகியோரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் கோவை அரசு […]
கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் […]
உயர் மின் அழுத்தம் தாக்கி யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுச்சாமி. இவர் குளத்தேரிப் பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் போது யானை அல்லது காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிரை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகள் வெளியேறியது. […]
உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைப்பற்றி சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மற்றும் வட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியவர்கள் கூறியதாவது. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நாரால் நீர் சேமிக்கும் கலன்களை நன்கு தேய்த்து கழுவி பின் தண்ணீர் பிடித்து மூடி வைக்க வேண்டும். இதை செய்வதினால் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் ஜீவானந்தம் […]
கோவை மாநகராட்சியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கு “துலிப்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “துலிப்” திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை உதவித்தொகையுடன் அளிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டி மூலம் தேர்வான 4400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவரங்கள் துறை “துலிப்” திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற […]
13 வயது சிறுமியை தனது நண்பருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட இருவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தோஷ். வயது 23 ஆகிறது.. இவன் அங்குள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறான். இவன் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல நாள்களாக அவருடன் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், […]
தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருவது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கட்டுப்படுத்தியது போல் பிற மாவட்டங்களிலும் கொரோனவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமிழக அரசு பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை கட்டு படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் திட்டங்களை வகுத்துள்ளது. […]
மேட்டுப்பாளையத்தில் காதில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.. யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது.. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது. […]
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு 16 வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.. கனிஷ்கா மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு என்பதால் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இதனை அனைத்து மாணவர்களும் படித்து […]
தன்னுடைய பெற்றோரை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருடன் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவுக்கடை நடத்திவருபவர் வேல்மயில். இவர் வழக்கம்போல் ஜூன் 17ஆம் தேதி தன்னுடைய மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் கடையில் வியாபாரம் செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைப்பதற்கு அனுமதியளிக்காத போதிலும், அவர் கடையை திறந்து வைத்துள்ளார். அதனால் அப்போது ரோந்துப் […]
11 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 2 மாணவர்களை போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.. தந்தை மற்றும் அத்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள்.. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமி, கீழ் வீட்டில் டிவி பார்க்கச் செல்வது வழக்கம்.. கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு […]
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஏற்பட்ட விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் சின்ன கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் ராமுலு.. 52 வயதுடைய இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தம்பதியர் இருவரும் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆனைமலை அடுத்துள்ள பால்பண்ணை சண்முகாபுரம் அருகே மினி ஆட்டோ ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது பைக்கும், மினிஆட்டோவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் […]
17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குழந்தைகள் காப்பகம் நடத்திவந்த நபர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போக்ஸோவில் கைதுசெய்யப்பட்ட நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அப்பகுதியில் 7 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்த காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது உறவினர் ஒருவர் சேர்த்துள்ளார். இந்தசூழலில், மேற்கொண்டு காப்பகத்தை நடத்தமுடியாமல் போன காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் […]