மீனவர் நலத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி மீனவர் குடும்பத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் டி.இ.எம்.கே.ஏ அறக்கட்டளை உபரி நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு […]
Tag: # Collector
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினம் வருகிற 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஓவியம், வாக்கியங்கள் அமைத்தல், பாட்டுப்போட்டி, சுவரொட்டி செய்தல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட அளவில் சிறப்பான 15 படைப்புகள் […]
ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த நிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 216 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களை 30 ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஏரி நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை […]
தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த கால […]
பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். அந்த கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, விழுப்புரம் திண்டிவனம் நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட வீதிகள், கடைவீதிகள், நகர்ப்புற சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும், […]
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]
தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் அவர்கள் நேரில் சென்று அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பீட்டில் உருவான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் […]
மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிநீர்பாட்டில், காபி போன்றவைகளை அலுவலக ஊழியர்கள் கொடுத்தனர். அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு பூர்வா கார்க் தனக்கு கொடுக்கப்பட்ட […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]
யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தில் பூல்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று அந்தப் பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவர் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 400 பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் மதுரையில் பெற்ற […]
வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]
நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குழந்தைத் திருமண சட்டப்படி பெண்களுக்கு 18 வயது மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிரம்பியும் இருக்க வேண்டும்.. அதுவே திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாகும். இந்த வயதிற்கு கீழ் நடக்கும் எந்த ஒரு திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படுகின்றது.. […]
தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தோக்கவாடி பகுதியிலுள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில் கூறப்பட்டதாவது, “தங்களது விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர், விசைத்தறி கூட வளாகத்தில் […]
கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டியானது கட்டப்பட்டது.. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. தற்போது அந்த பழைய நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பழைய குடிநீர்த் […]
சேலத்திலுள்ள 8,600 வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனோ நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலங்களைச் […]
விருதுநகர் அருகே காளியம்மனுக்கு பூஜை செய்யும் வழிப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்ட பெண்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த மடத்துபட்டி கிராமத்தில் இரு சமுதாயத்தின் இடையே காளியம்மன் கோவிலில் வழிபாட்டை விட்டு கொடுப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் […]
மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் […]
சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், சிறுநீரகக் […]
உலக வேட்டி தினத்தை முன்னிட்டு, எப்போதும் வெஸ்டன் உடையுடன் இருக்கும் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா நேற்று வேட்டி உடையுடன் வலம்வந்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. வேட்டி தினத்தை சிறப்பிக்கும்விதமாக இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நேற்று வேட்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர். இந்நிலையில் எப்போதும் வெஸ்டர்ன் கலாசாரமான பேன்ட், சட்டை அணிந்திருக்கும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, உலக வேட்டி தினத்தை […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் […]
தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக சொற்ப ராஜ் அகமது என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரசு அளித்துள்ள ford காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனமானது கடந்து தொடர்ந்து ஏழு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் படி, தவறான இடத்தில் செய்வது அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது உள்ளிட்ட ஏழு […]
அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பாதுக்காப்பு பணியில் இரவு பகலாக உழைத்த காவல்ல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டி சிறப்பிக்கும்விதமாக பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிகழ்த்தினார். இந்நிலையில் நாள்தோறும் 30 டன் கழிவுகளை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் என 3,617பேர் 150 […]
கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக ஓடி காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]
பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]
இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]