திருக்குறளை பின்பற்றி நடந்தால் சிறந்த நிலைக்கு செல்ல முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ-மாணவிகளுக்கும், காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை […]
Tag: collector information
முன்று நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் இருக்கும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை வருகின்ற 15-ஆம் தேதி, 18-ஆம் தேதி மற்றும் 26-ஆம் தேதி மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனை அடுத்து […]
இ-சேவை மையம் மூலமாக பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கீழ் இ-சேவை மையத்தின் மூலமாக தற்போது பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து பழங்குடியினர்களுக்கான ஜாதிச் சான்றிதழ் இணைய தளத்தின் மூலமாக வழங்கப்படயுள்ளது. இந்தச் சான்று கோரிக்கை விண்ணப்பிக்கும் பழங்குடியினர் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதினால் இம்மாவட்டத்தில் பூங்காக்கள், பொது இடங்கள், சாலைகள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்ற பல இடங்களில் இரவில் நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பது தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடப்படும் பட்சத்தில் தற்போது […]
பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரச்சாரம் தொடக்கம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்ப்படுத்தவும் மற்றும் […]
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கடைசி இடத்தில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்து இருக்கும் பள்ளி கட்டிடங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பழுதான கட்டிடங்களுக்கு அருகில் மாணவ-மாணவிகள் செல்லாமல் இருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்குமாறும், 2 வாரங்களுக்கு முன்னதாகவே பழுதடைந்த கட்டிடங்களை கண்டறியும் பணிகளை செய்து தற்போது அதை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைப் போன்றே பள்ளிகளில் படிக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவ-மாணவியர்களின் குடும்ப சூழ்நிலையை […]
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறு,குறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலைகளை விடுவதற்கும், தற்சமயம் இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் இருக்கும் வேலூர் கிளை அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வருகிற 15-ஆம் தேதி […]
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற வருகிற 8-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வேலூர் கோட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடிக் கொண்ட குடியிருப்புகள் கட்டிப் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இம்மாவட்ட எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் மறு குடியமர்வு செய்வதற்கு […]
நீர்நிலைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஆவணங்களை சரிபார்த்து […]
மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 40 % மானியம் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 சதவிதம் மானியத்தை மீன்களை வளர்க்கின்றவர்களின் மேம்பாட்டின் முகமை சார்ந்த உறுப்பினர் அனைவருக்கும் வழங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது பற்றி கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, 2021-22 ஆம் வருடம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் மற்றும் மத்திய அரசு பங்களிப்பு திட்டத்தின் கீழாக இம்மாவட்டத்தில் இருக்கும் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக […]
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் 71 ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்டரங்கில் வைத்து முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளுக்கு பரிசுப்பொருட்கள், 30 பொதுமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை, கைகள் மற்றும் கால்களை இழந்த 9 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலமாக 8 லட்சம் மதிப்புடைய நவீன செயற்கை கால்கள் […]
3,00,000 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வாரநாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்பின் சிறப்பு பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாக நேரில் சென்று செல்போன் எண்ணை கொண்டு அல்லது கோவிட் செயலின் மூலமும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து […]