செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வங்கி கடன்கள், அரசு பணி கோருதல், மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 97 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 11,55,000 ரூபாய் […]
Tag: # Collector Office
500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றுக்கு அருகில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனையடுத்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவைத் தொழிலாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சலவை தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அன்பரசு என்ற மகன் இருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனையில் வீடு கட்டுவதற்காக ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை சக்திவேல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது […]
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுப்பதற்காக […]
திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட […]