ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]
Tag: complaint
திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி மாண்டிச்சேரி பள்ளியை நான் நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். […]
நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது “சும்மா இருந்த விவேக்கை தடுப்பூசி போட வைத்து கொன்றுவிட்டீர்கள். எனது ரத்தம் கொதிக்கிறது. கொரோனா டெஸ்ட் தப்பா எடுக்கிறீர்கள். அதற்கு மருந்தும் தப்பா கொடுத்துக் […]
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சீவி நகரில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பற்ற குடிநீரை பழைய தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி உணவு பாதுகாப்பு துறையில் […]
பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக கீழரத வீதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஏ.டி.எம் எந்திரத்தில் அவரது கார்டு சரியாக அமையாத காரணத்தால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த முகக் கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் பணம் எடுக்க உதவி […]
நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]
பட்டதாரி இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, அதன் பின் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வினோதினி வந்து சேராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் […]
தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]
வீடு புகுந்து பொருட்களை வண்டியில் ஏற்றி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆண்டுகளாக மேடவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தரைதளத்தில் அவர் வசித்து வருவதாகவும், தனது மகன் கௌதம் என்பவர் இரண்டாவது தளத்தில் அவருடைய குடும்பத்தோடு வசித்து […]
வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் திருமணமான கலையரசி(30) என்ற பெண் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.. அந்தபுகாரில், ” எங்களது வீட்டின் உரிமையாளரின் பெயர் கண்ணன். இவர் வேப்பேரி போக்குவரத்து காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று குளியலறையில் இருந்து குளித்து விட்டு நான் வீட்டுக்குள் […]
நாட்டில் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் பழக வேண்டும்.. ஆனால் ஒரு சிலர் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரித்து பார்க்கின்றனர். சில இடங்களில் சாதி ரீதியான தாக்குதல், மத ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற தாக்குதல் அதிகம் நடக்கும்.. அதேபோல தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் சாதி, மத ரீதியான தாக்குதல் நடந்தேறி வருகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் […]
புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு 20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி […]
தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது ” தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் எனக்கு தமிழக மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி மிகவும் தவறான தகவல்களை தெலுங்கு துணை நடிகரும் 50 வயது மதிக்கத்தக்க டான்ஸ் […]
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் மீது அஸ்ஸாம் மக்கள் தொண்டு நிறுவனத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, ஏ.பி.டபிள்யூ தலைவர் அபிஜித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிவடிவம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டலின்படி நடக்கவில்லை. இதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். […]
நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பெண் நடன இயக்குநர் அவதூறு வழக்கு பதிந்துள்ளதாக கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடன ஆசிரியராக வலம்வருபவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீது இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் 33 வயது உள்ள ஒரு பெண் நடன ஆசிரியைப் புகார் ஒன்று கொடுத்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச விடியோ பார்க்கச் சொல்வதாகவும், தனது சம்பளத்தில் பாதியை தரகுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் […]
வன்கொடுமை செய்த கணவர் மீது நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும், இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர் மனைவி தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐபிஎஸ் அலுவலராக கேரளாவில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து 500 சவரன் நகையுடன் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை […]
நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை அவதூறாகப் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் […]
புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]
நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் 2015ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து ‘எலி’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தின் மூலம் சதீஷ்குமாருக்கு ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன், தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்திற்குச் சென்று அடிக்கடி ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார். […]
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார். ‘பரதேசி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் […]
டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார். டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய அந்த மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் போலியான அடையாள […]
காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும் ,புகாரில் கூறப்பட்டுள்ளது .
கரூரில் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது . தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா […]
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது. கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.கோடை விடுமுறை காரணமாக இங்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது . இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையின் வாகனத்தில் செல்ல மட்டுமே தாங்கள் அனுமதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். அதனால் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.