கேரள கலால் அதிகாரிகளால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரத்து 750 லிட்டர் சாராயம் தமிழ்நாடு எல்லைப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியான சின்னக்கண்ணூரில் பெருமளவு சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக, கேரள கலால் அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்மந்தப்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் 450 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் […]
Tag: Confiscated
வடவள்ளி பகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் […]
பொள்ளாச்சி அருகே தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 655 லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வுத்துறை நுண்ணறிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுபுணி ஆகிய பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, எரிசாராயம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் அதிக அளவில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய புலனாய்வுத்துறையின் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு, பொள்ளாச்சி அருகே நெகமம் […]
இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]
பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை அசோக்நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு சகஜமாக கஞ்சா கிடைப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எம்ஜிஆர் நகர், அசோக்நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவது […]
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 70 வெள்ளிப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து, சுமார் 70 கிலோ வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை ஒரு கும்பல் வாங்கியுள்ளது. அதனுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் சேலம் செல்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் (TN04 AF 6870) கோயம்பேடு வந்துள்ளார். மெட்ரோ அலுவலகம் அருகில் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே ரோந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் […]
வேலூர் மக்களவை தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூபாய் 3.57 கோடி கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் […]
தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் கொண்டு சென்ற வண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். […]