தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட விஷத்தன்மை உடைய உயிரினங்களை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இப்ராகிம் ஷா (38) என்பவரிடம் அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு […]
Tag: confiscation
ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி […]
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]