ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நிறுத்தி வைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி நேற்று மதியம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது […]
Tag: Congress
வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.யாருக்கெல்லாம் வாக்களிக்க […]
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில், அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகினார்.. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்று, அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் […]
பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ தேசிய செயலர் டி ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் […]
விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் சதி என கூறுவது முற்றிலும் தவறு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மத்திய அரசு வேளாண் சடங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் சதி என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற சொற்களை பயன்படுத்துவது பாவச் செயல் என்றும் […]
விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனிடையே பயிர் காப்பீடு செய்து […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து, குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் […]
அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]
வேலையின்மைக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பகுதியாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கையாண்டு வந்தனர். இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை நெருக்கடிக்கு எதிராக […]
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் இன்றளவும் ஊரடங்கு கடுமையாகவும் தளர்வுகளுடனும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கினால் பல குடும்பங்களின் பொருளாதார […]
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மேலேயும் கொரோனா தடுப்பு பணி, லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மத்திய […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது பிரதமர் ஆவார். 87 வயதான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 22 மே 2004 முதல் 26 மே 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவரின் வயது முதிர்ச்சி காரணமாக தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் மன்மோகன் சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to All India Institute of Medical Sciences (AIIMS) after complaining about chest pain (File pic) pic.twitter.com/a38ajJDNQP — ANI (@ANI) May 10, 2020
ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது கைகளை எப்படி கழுவ வேண்டும் […]
மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]
மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை விட கீழ் […]
மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில […]
மத்திய பிரதேச மாநில அரசியலில் புதிய புதிய அரசியல் திரும்புங்கள் நிகழ்ந்து வருவது தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு கர்நாடகாவில் தஞ்சம் புகுந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சியான பாஜக அதிக […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது : எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய […]
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அசாம் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் செய்தியாளர் சந்தித்த பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அதில் ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை […]
மத்திய பிரதேச மாநில அரசியலில் தீடிர் திருப்பமாக மாநில ஆளுநரை முதல்வர் சந்திக்க இருக்கின்றார். மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியபிரதேச மாநில ஆளும் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் […]
பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி […]
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் பேசிய அவர் , நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு , கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்பு இருந்ததை […]
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய அலுவலகம் வந்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]
மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]
7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் […]
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 12.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் பாரதிய ஜனதா கட்சி எப்போது சேர்வார் ? இதற்கான நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி எங்கு நடத்தும், டெல்லியில் நடத்துமா ? அல்ல மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடத்துமா ? எப்போது நடக்கும் என்று பல்வேறு விதமான கேள்விகள் […]
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இச்செயல்கள் மாநில அரசின் அதிகாரங்களில் […]
ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பின்னர் காங்கிரஸ் […]
மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் நேற்று இரவிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இது […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாஜகவில் இணையவுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை தேர்தலில் […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை […]
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராத்திய சிந்தியா கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் […]
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் […]
மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]
மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு […]
முக.ஸ்டாலினிடம் மாநிலங்களவை சீட் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது , தமிழ்நாட்டில் நடைபெறும் சிஏ போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட்டு பங்கீட்டு கொள்வது குறித்து திமுகவுடன் எந்தவித உடன்பாடும் […]
YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான YES பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]
எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் , வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]
காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]