பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். […]
Tag: Congress
இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]
அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று […]
அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது. அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற […]
மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119 உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது. காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா : கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா […]
சுயேச்சை MLA நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார். சிவகுமார் கர்நாடக அரசில் […]
கர்நாகவில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட , காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்எல்.ஏக்கள் 12 பேர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக குமாரசாமி அரசிற்கு நெருக்கடி […]
கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 […]
டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான […]
கர்நாடகாவில் 11 MLA_க்கள் சபாநாயகரை சந்திக்க இருப்பது அரசியலில் தீடிர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் கட்சியில் 80 இடங்கள் , மதசார்பற்ற […]
மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த தண்ணீர் 12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் […]
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் , 2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் […]
திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே […]
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கை வெளியிட்டார். ராகுலின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ராகுலின் […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமித்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று மோதிலால் வோரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பெறுபேற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தான் காங்கிரஸ் தலைவர் கிடையாது புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மூத்த மோதிலால் வோரா செயல்படுவார் என தகவல் வெளியாகியது. இது குறித்து பேசிய மோதிலால் வோரா , […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்வார் என்று உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக […]
ராஜினாமாவை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு பொறுபேற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் கொடுத்தார்.ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கான காரணங்களை […]
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்ததோடு அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தினர்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முதலமைசர்கள் ராகுல் காந்தி _யிடம் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தினர். […]
காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் கிடையாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது. […]
காவேரி மேலாண்மை வாரியம் குறித்து ராகுல் பேசியதாக பொய் சொல்ல கூடாது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய தமிழக முதலவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் , மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறினார். […]
ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]
சஸ்பன்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி இவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி கராத்தே தியாகராஜன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் ஒழுங்கீனம் காரணமாகவும் இந்த முடிவை காங்கிரஸ் […]
புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]
காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின் KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில் கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]
முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார் என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் […]
முத்தலாக் சட்ட மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. முஸ்லீம் மதத்தில் கணவன் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அடுத்தடுத்து ‘தலாக்’ என்று 3 முறை கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முஸ்லீம் மத சட்டத்தை தடை செய்யும் நோக்கத்தில் மோடியின் முந்தைய கால ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது முத்தலாக் சட்ட மசோதா. இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற சட்டம் […]
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே […]
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் , திமுக […]
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக_வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]
ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எனது […]
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பாஜகவின் MP வீரேந்திரகுமாரை மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி , ராஜ்நாத்சிங் உள்பட 313 பேர் MP-யாக பதவியேற்ற […]
வயநாடு MP_யாக பதவியேற்ற பின் ராகுல் காந்தி கையெழுத்திடாமல் சென்றதை பார்த்த ராஜ்நாத் சிங் கையெழுத்திடுமாறு நினைவூட்டினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30_ஆம் தேதி பதவி ஏற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 31_ஆம் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 17-வது […]
ஜம்மு காஷ்மீரில் முன் கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் […]
ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை […]
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் . வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது, ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில் விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. […]
ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]
தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தால் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவுரை வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்று பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான தலைவர் பதவியை ராஜினாமா செய்து கொண்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கான பொறுப்பை ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக […]
தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக […]
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]
புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர் பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]
நேருவின் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிற்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் . கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசாத மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் வரை மொழித் திணிப்பை செய்யமாட்டோம் […]
உள்ளாட்சியில் 30 சதவீதம் வென்ற பாஜக மக்களவையில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியுமென்று காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வியெழுப்பியுள்ளார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான 353 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் பாஜகவின் இந்த […]
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து […]
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]