Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்களவையின் காங்கிரஸ் தலைவர்” தொடங்கியது M.P_க்கள் கூட்டம்…!!

மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து  மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற  இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற  கூட்டத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்….!!

வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வயநாட்டிற்கு புறப்படும் ராகுல்” வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்…!!

வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில்  தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]

Categories
அரசியல்

விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ்க்கு தடை..!!

ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது . நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ராகுல் ராஜினாமா ..!!”காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு “

ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின . இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக […]

Categories
அரசியல்

“தொடரும் ராகுல் காந்தி சர்ச்சை “ராஜினாமா உறுதி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி  தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சியின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேராத அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
அரசியல்

“தோல்வியால் தனது பதவியை ராஜனாமா செய்கிறார் ராகுல் காந்தி “தொடரும் தேர்தல் பரபரப்பு !!..

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குடும்ப அரசியலால் காங்கிரஸ் படுதோல்வி “ராகுல் காந்தி மீது கட்சி தொண்டர்கள் கடும் விமர்சனம் !!..

காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம்  மற்றும் குடும்ப அரசியல்  காரணம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  நடைபெற்று  முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியானது  பெரும்பான்மையான தொகுதிகளில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில்  மாபெரும் வெற்றி பெற்று  காங்கிரஸ் கட்சியை  படுதோல்வியடைய செய்தது . இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது , தேர்தலுக்கு முந்தைய காலங்களில் பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“303 இடங்களில் பாஜக முதலிடம்” தேசியளவில் 3_ஆம் இடம் பிடித்த திமுக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக தேசியளவில் முதல் கட்சியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு குறித்து நேற்று இந்திய தலைமை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு கனட பிரதமர் ஜஸ்டின் வாழ்த்து..!!

மக்களவை தேர்தலில் மாபெரும்  வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு  நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா  கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் படு தோல்வி…. தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ராஜ் பப்பர்…!!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த காரணத்தால் ராஜ் பப்பர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்..  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம்முள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் ஆகிய கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலில் தேசியளவில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள்….!!

மக்களவை தேர்தலில் தேசியளவில்  இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்கள் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக கூட்டணி 350 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. இதே போல தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார்.  பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர். தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம்” டி.டி.வி தினகரன்..!!

 அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை  பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜனநாயக முறைப்படி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம்” முக ஸ்டாலின்..!!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.     நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் 92 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால்  மோடியே மீண்டும் பிரதமராவார் என்பது உறுதியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

 பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில்  பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்தது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவின் வெற்றி உறுதி” மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர்..!!

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் மோடியே பிரதமர்” பல்வேறு நாட்டு அதிபர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பேசும் மக்கள் ஆதரவு” ஆதிக்கம் செலுத்தும் பிஜேபி…..!!

இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் பாஜக 161 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்” பிரதமர் மோடி ட்விட்..!!

பிரதமர் மோடி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னிலை நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அமித்ஷா…..!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் கட்சியின் தலைவர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் பிரதமராகும் மோடி” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜக 301 தொகுதி தனித்து முன்னிலை” நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டம்…!!

மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜக மட்டும் 301 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொண்டர்களை சந்திக்கும் மோடி” 20,000 பேருக்கு அழைப்பு…. களைகட்டும் பிஜேபி தலைமையகம்…!!

மக்களவை தேர்தல் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து இன்று மாலை கட்சி தொண்டர்களை மோடி சந்திக்க இருக்கின்றார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் 7 தொகுதியில் பாஜக முன்னிலை….!!

டெல்லி மாநில  மக்களவை தேர்தலில் பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 334 கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 23 தொகுதிகளில் பாஜக முன்னிலை…..!!

கர்நாடக மாநிலத்தின்  மக்களவை தேர்தலில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி முன்னிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அம்போ” 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை…!!

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது.  அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலை கை விட்ட வட மாநிலம்…. “கை கொடுத்த தென் மாநிலம்” 1 லட்சம் வாக்குகள் முன்னிலை….!!

வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள்  தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கூட்டணி 322 தொகுதியில் முன்னிலை……!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி  322 மேற்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் தலைமையில் ஆட்சி..? “மே 23_ஆம் தேதி ஆலோசனை” சோனியா அழைப்பு….!!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள்  அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக , தனக்கு எதிராக கோஷம்” கைகொடுத்து வாழ்த்திய பிரியங்கா….!!

தனக்கு எதிராக கோஷமிட்டவர்களை சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசியபடி பிரியங்கா காந்தி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுடன் கூட்டணி” அரசியலை விட்டு விலக தயாரா..? முக.ஸ்டாலின் கேள்வி…!!

பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு  நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்த பிரியங்கா” வைரலாகும் வீடியோ…..!!

தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக  போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார்” பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்…!!

கோவா மாநில பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவா மாநிலத்தின் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெறுகின்றது.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார்.  முன்னாள் அமைச்சராக இருந்த இவர் மீது கடந்த 2016_ஆம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரமாக பயன்படுத்தியது” பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.  இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள்  70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]

Categories
தேசிய செய்திகள்

“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!

ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே  தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண் முன்னேயே அவரது  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த  கொடூர சம்பவத்தை  வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிமுக நிர்வாகியை துடிதுடிக்க கட்டையால் தாக்கிய திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் “போலீசார் வலைவீச்சு !!

தேர்தல் காலங்களில் நடந்த முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை அடுத்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆவார் இந்நிலையில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளின் போது இவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தன்னை தாக்க முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தெய்வசிகாமணி காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல்

‘ராஜீவ்காந்தி ஊழல்களில் நம்பர் 1’ -விமர்சித்த மோடி !! காங்கிரஸ் புகார்!!!

காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம்   புகார் அளித்துள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று   காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும்  ,புகாரில் கூறப்பட்டுள்ளது .

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை” – தேர்தல் ஆணையம்!!

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட  நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின்  நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என  வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி இப்படி பேசியது  தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின்  சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர். இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா_வில் மோடி ராகுல் பிரச்சாரம்” 29_ஆம் தேதி வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை….. வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்…!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை   பிரதமர் மோடி  நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின்  தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் “காங்கிரஸ் கட்சி திடீர் முடிவு !!…

பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது  பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக காங்கிரஸ் SC துறை தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,   தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு  தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.இந்த தாக்குதலில் பலரும் காயம் […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி…!!

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கை. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை கேட்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் […]

Categories

Tech |