Categories
Uncategorized

BREAKING: ”ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு” மனுவை தள்ளுபடி …!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ_யால் கைது செய்யப்பட்டு இன்றோடு 87 நாட்கள் ஆகின்றது. முதலில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு அவர்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஏற்கவே சிபிஐ_யால் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: மகாராஷ்டிரா : 3 கட்சியினர் நாளை ஆளுனருடன் சந்திப்பு …..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , சிவசேனா தேசியவாத காங்கிரஸ் நாளை ஆளுநரிடம் சந்திக்கிறார்கள். மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள். மூன்று பேருக்குமே ஒத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கலாம் என்றும் , […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தீர்ப்பு……!!

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனு மீது டெல்லி உயர் நீதின்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 74 வயதான காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை அமலாக்கத் துறையினர் அக்டோபர் 16ஆம் தேதி காவலில் எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காவல் கடந்த 13ஆம் தேதியோடு முடிவடைந்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு …!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.104 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லாம் போச்சு…. மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அமைச்சர் வேண்டாம்” பதவியை தூக்கி எறிந்த சிவசேனா …..!!

பாஜகவுடனான கூட்டணி முறிவைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. இதனால் அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: சகோதர , சகோதரி கருத்து…..!!

அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அய்யோ பாவம்… ”இனி பாஜகவில் முடியாது”…. காங்கிரஸ் கடும் விமர்சனம் …!!

ராமர் கோயிலை வைத்து இனி பாஜக அரசியல் செய்ய முடியாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே.!.. தலைவர் பேசுனாலே மாஸ் தான் ….. இதுக்கும் அவார்ட் வாய்ப்பா ?

எனக்கும் , திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை மதம் , ஜாதிக்குள் அடக்க முடியாது என்று தெரிவித்த ரஜினி எனக்கு காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள் , அதில் நான் சிக்க மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதற்க்கு பல்வேறு கட்சியினர் வரவேற்றப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

SPG பாதுகாப்பு இல்லை…. ”பாஜகவின் பழிவாங்கல்” – அஹமத் படேல் சாடல் …!!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதிய சீண்டாதீங்க…. ”நாங்க உங்களை எதிர்ப்போம்”- திருநாவுக்கரசர்

ஸ்டாலினை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர்’ – சஞ்சய் தத்

மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடு முழுவதும் 10 நாள் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு….!!

 பொருளாதார மந்தநிலையை மக்களிடம் எடுத்துச் சொல்ல நாடு முழுவதும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் கூறியுள்ளார். இந்திய பொருளாதார சரிவுக்கு பாஜக அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பேசுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! – ப. சிதம்பரம் அசத்தல் பதிவு …!!

திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ரகசிய தகவல்கள் கசியவிடப்படுகிறதா?

கட்சி எடுக்கும் ரகசிய முடிவுகள் மற்ற கட்சிக்குச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தும்விதமாக முக்கிய கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்சப் சரியில்லைங்க…….. 13 எதிர்க்கட்சி தலைவர்கள்…… குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க திட்டம்…..!!

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

‘என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ‘ – ஜோதிமணி MP பதிலடி …!!

எனது உடைகளை விமர்சனம் செய்யும் பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பை புரிந்து கொள்ள முடிகிறது. எந்தத் தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று ஜோதிமணி எம்.பி. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் இயங்கிவரும் விட்டல் வாய்சஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் உள்ள இளம்பெண் அரசியல் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்….!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திடீர் அரசியல் திருப்பம்….. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி… கோட்டை விட்ட பாஜக…..!!.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது ? உயர்நீதிமன்றம் காட்டம் …!!

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு  கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்  கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு …!!

 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை சரி பண்ணலைனா மறியல் தான்…… காங்கிரஸ் MP எச்சரிக்கை….!!

பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது  அவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக…..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்வி – காரணம்?

நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் படுதோல்வி அடைந்துள்ளார். இடைத்தேர்தல் அறிவித்த சமயத்தில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை திமுகவிடம் பெரிதும் போராடி காங்கிரஸ் பெற்றது என தகவல்கள் அப்போது வெளியானது. காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதி என கூறப்பட்ட நிலையில் தற்போது நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்விக்கான காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது.நாங்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 33 ஆயிரத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆதித்ய தாக்கரே முதலமைச்சராக வாய்ப்பு..?

மகாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வொர்லி தொகுதியில் வெற்றிபெற்ற ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்டு, 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. பாஜக சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற விருக்கிறது. இருந்தபோதிலும், யாருக்கும் தனிப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் திமுக தோல்வி! – ஒரு அலசல் டேட்டா ரிப்போர்ட் …!!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் தோல்விக்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தரப்புக்கு வெற்றி கிட்டியது. திமுகவின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. விக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 40 விழுக்காடு உள்ளனர். பட்டியலினத்தவர்கள் 25 விழுக்காடும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரும் மற்ற சமுகத்தினர் சொற்ப அளவிலும் உள்ளனர். இத்தொகுதியில் இரு கட்சிகளும் (திமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிக்கு கடந்த  21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ் செல்வனும் , நாங்குநேரியில் நாராயணனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். திமுக தலைமையிலான கூட்டணியின் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனும் , விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அதே போல நாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி அமைக்கும் சாவி….”10 மாதத்தில் 10 இடம்” கிங் மேக்கர் துஷன் சவுதாலா…!!

ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும்  கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மறக்க மாட்டேன் ”என்னை வச்சு செஞ்சுட்டிங்க” காங். வேட்பாளர்…!!

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற  ஜான்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வெற்றிபெற்ற […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

”இந்த வெற்றி எங்களுக்கு தீபாவளி பரிசு” புதுவை முதல்வர் பேட்டி …!!

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

இனி வேற மாறி ஆடுவோம்… ” ஆட்டம் வலிமையா இருக்கும்”…. சீமான் பேட்டி ….!!

அதிமுகவின் வெற்றி பெறப் பட்டவை அல்ல 2000 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நாங்கள் மட்டும் தான் ”எங்கள் காலம் தான்” பொன்.ராதாகிருஷ்ணன்….!!

அதிமுகவின் வெற்றியில் பாஜகவிற்கு பங்குள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பாண்டவர் படைகள் ”ஓடி ஒளிஞ்சுட்டாங்க” அமைச்சர் ஜெயக்குமார்  …!!

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது அரசுக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை  முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்தவகையில் தமிழக மீன்வளத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட பாவமே.! வெறும் 11 ஓட்டு தானா ? ….. ”அதோ கதியில் நாம் தமிழர்”….. பரிதாபத்தில் சீமான் …!!

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மிகவும் சொற்ப அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில்  தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் , புதுவை இடைத்தேர்தலில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : காங்கிரஸ்_ஸா ? கம்யூனிஸ்ட்_டா ?

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3,494 ஓட்டு…. நான்காம் இடம் …. தூக்கி எறியப்பட்ட நாம் தமிழர் …..!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வாக்காளர்களுக்கு நன்றி” – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை ….!!

நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில்  அதிமுக வெற்றியடைந்ததை அடுத்து OPS , EPS கூட்டறிக்கை விடுத்துள்ளனர் மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல்  கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி பெற்று விட்டேன் ….. சான்றிதழை வாங்கிய புதிய MLA ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ் செல்வன் அதற்கான சான்றிதழை பெற்றார். கடந்த 21_ஆம் தேதி தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒட்டு மொத்த வாக்குப்பதிவையும் இன்று காலை 8 மணிக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 94,562 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,5782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” ஸ்டாலின் அறிக்கை ….!!

நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரம் ,ஹரியானா மாநிலங்களின் சட்டசபை மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் இடைத்தேர்தல்  கடந்த 21_ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறது. அதன் முடிவு இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி மற்றும் திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆரம்பத்தில் இருந்து அதிரடி.. ”திமுகவை தூக்கிய அதிமுக”…. அசத்தல் வெற்றி …!!

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: திமுகவை ”தெறிக்க விட்ட அதிமுக” நாங்குநேரியில் வெற்றி….!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கூட்டணியில் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING: ”விக்ரவாண்டியில் அதிமுக வெற்றி” திமுகவை பந்தாடியது ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடர்ந்து முன்னிலை ”அதிமுக_வுக்கு திடீர் சறுக்கல்” … எகிறும் காங்கிரஸ்…!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் 9_ஆவது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.   […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரியில் அதிமுக 14,266 வாக்குகள் முன்னிலை ….!!

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.   இதில் அதிமுகவின் கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் அதிமுக 29,591 வாக்குகள் முன்னிலை ….!!

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றது. காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கூட்டணியில் விக்கிரவாண்டியில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை ஜான்குமார் பெற்றார் …!!

காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தலை நடத்தும் அலுவலரிடம் பெற்றார். காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி….!!

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ், அதிமுக இடையே ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி அக்டோபர் 21ஆம் தேதியன்று அத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் 66.35 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 299 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தா மற்ற கட்சி அழிஞ்சுடும் – பொன்.ராதாகிருஷ்ணன் …!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

அங்க விட்டுட்டாங்க…. நீங்களும் விடுங்க ….. ஐடியா_வுடன் ப.சிதம்பரம் ஜாமீன் மனு …!!

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்றையதினம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்தாலும் தற்போது அவரால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்த வாரம் திகார் சிறையில் நேரடியாகச் சென்று கைது செய்தது. இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]

Categories

Tech |