Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சி தகவல்!

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய அரசு தகவல்!

ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது – அமைச்சர் வேலுமணி வேதனை!

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது என அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், நேற்று இரவு சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரது பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் & சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் கைது! 

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்  தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த  சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இரண்டு மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265ஆக உயர்வு…. 543 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஊரங்கில் சில தளர்வுகள் அமல் – அறிவிப்பில் இல்லாதவை என மத்திய அரசு கண்டனம்!

கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது – ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்! தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்துள்ளனர். கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர், தூத்துக்குடி 5 பேர், திருவண்ணாமலை 4 பேர், சேலம், வேலூர், […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்தனர்…. புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை!

கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்துள்ளதாகவும், ஏப்., 3ம் தேதிக்கு பின்னர் கோவாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார் இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதி… 27 பேர் உயிரிழப்பு – முழு விவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,60,755ஆக உள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி…. ஆனால் சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும்!

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு சில புதிய கட்டுபாடுகளை விதித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி… ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  டெல்லியில் 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 1069 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என குறிப்பிட்ட அவர், வரும் 27ம் தேதி மறு ஆய்வுக்கூட்டம் நடைபெறும், அதில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழக அரசு அதிக விலைக்கு கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையி மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெறுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் – பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு!

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்…. சென்னையில் 30 பேர், திருவாரூரில் 14 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை… ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். […]

Categories
சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை….. 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி!

சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நடத்திய பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்துள்ளது நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வந்தடைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள்… முதல்முறையாக சேலத்தில் பரிசோதனை தொடங்கியது!

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தன. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி!

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 1,54,241ஆக உயர்வு….. 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5,71,577 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,241 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை கொரோனோவால் 7,09,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் மட்டும் 37,154 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒரே நாளில் 2,516 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,002ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பை மறைத்து காட்டிய சீனா….. உலக நாடுகள் குற்றச்சாட்டு!

சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்! 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :  1. […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்….. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய நோய் பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயது மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – முதல்வர் தகவல்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில் 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இங்கு காண்போம்., மகாராஷ்டிரா – மகாராஷ்டிராவில் புதிதாக 288 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,204ஆக […]

Categories
தேசிய செய்திகள்

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு மருந்துகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என மருத்துவ குழு கூறியிருந்தது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், மெட்ரோனிடேஷில், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விரைவு பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.75%ஆக குறைப்பு – ஆர்பிஐ அதிரடி அறிவிப்புகள்!

கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஆட்டோ மொபைல் துறை சரிவு; இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது – சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 12,380ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,489ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 414ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வுதான், ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ள அவர், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது – முதல்வர் பழனிசாமி வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது – முதல்வர் நன்றி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏப் 20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் – முதல்வர் நம்பிக்கை!

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது, எனினும் தமிழக அரசின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு […]

Categories
அரசியல்

“முதல்வரால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது”…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – யுபிஎஸ்சி அறிவிப்பு!

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை […]

Categories

Tech |