இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]
Tag: #CoronaLockdown | #StayHome
பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம் என்பதால் அதனையும் தொடங்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் […]
ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது, நம்பிக்கையோடு இருங்கள் என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது […]
வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியை கண்காணிக்க 3 சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்கு மட்டும் 4 விமான சேவைகள் இயக்கப்படும் என […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை […]
ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]
நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு […]
ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜ்மீரில் – 8,2 தோல்பூரில் – 2, துங்கர்பூரில் – 1, ஜலாவர் & ஜோத்பூர் – தலா 5 மற்றும் கோட்டாவில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,059ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 32 பேர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில் 493 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக […]
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]