Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மக்களே பயம் வேண்டாம்…. ஒரே நாளில் 2,59,168பேர் குணம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட்…!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட  4,171 எண்ணிக்கையில் குறைவாகும். புதிதாக 525 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  தமிழகத்தில் coronavirus அதிகரிப்பு…. கட்டுப்பாடு அமல்….? வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து தொடங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 610 பேருக்கு தொற்று உறுதியான காரணத்தினால் பாதிப்பு எண்ணிக்கை 27,44,037 ஆக, 679 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆகவும், 10 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,735 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால்  கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தில்போலி தடுப்பூசிகள் இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,  “தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற பகுதிகளில் தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை; நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம்” தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசியில் வழங்க […]

Categories
உலக செய்திகள்

திக்..திக் ஆன பிரேசில்…! ஒரே நாளில் உச்சம்… விடாது துரத்தும் கொரோனா …!!

பிரேசிலில் இன்று புதிதாக 90,303 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது  இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90,303 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 28,475  ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
கொரோனா தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லா தென்காசி…! அடுத்த நாளில் அதிர்ச்சி…. மீண்டும் உறுதியான தொற்று ….!!

தென்காசி மாவட்டம்  கொரோனா பாதிப்பு  இல்லாத மாவட்டமாக மாறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு  காரணமாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது.  இந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும்  பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை ஒவ்வொரு  நாளும் குறைய தொடங்கின.  தென்காசியில் மட்டும்  இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 8,449  பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி கண்டு புடிச்சாச்சுல்ல…! இனி அதுலாம் எதுக்கு ? பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ் ..!!

கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முழு செலவையும் அரசே ஏற்கும்… நாடு முழுவதும் பிரதமர் அதிரடி … மிக முக்கிய அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,இந்த நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுதனர் & விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மக்கள் சந்திக்க முடியவில்லை. இன்று நாம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை உணர்கிறோம். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3மாதத்தில்…. 3கோடி பேருக்கு… கலக்கும் இந்தியா… தடுப்பூசி பணி தொடக்கம் …!!

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு  தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து இருந்தாலும் கொரோனாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விட வேகம்….! ”பரவும் புதிய வகை வைரஸ்”… மக்களுக்கு எச்சரிக்கை …!!

பிரிட்டனில் அதிவேகமாக பரவக்கூடிய தன்மை உடைய புதிய கொரோனவைரஸ் பரவுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கொரோனவைரஸ் தாக்கம் காரணமாக உலகமெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளதால் நோய் தொற்று கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் முந்தைய வைரஸ் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 11.71 லட்சம் பேருக்‍கு கொரோனா பரிசோதனை…!!!

நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோருக்கு  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை ஒரு கோடியே தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும்,  தமிழகம் 4வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து  மாநிலங்களிலும் நேற்றுவரை 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேரின்  இரத்த மாதிரிகள்  கொரோனா வைரஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு முறையில் திடீர் மாற்றம்! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் ஆல் பாஸ் என்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கட்டணம் செலுத்திய பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளர் கொரோனாவால் மரணம்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (வயது 70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இவர் 1985-1990 வரை உருளையன் பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.. பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் மகனுக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்..!!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனான பங்கஜ் சிங், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மத்திய மாநில அமைச்சர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனும், கெளதம் புத்தா நகர் எம்எல்ஏ-வுமான பங்கஜ் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று அறிகுறி தென்பட்ட நிலையில், அதற்கான பரிசோனையை மேற்கொண்டார்  பங்கஜ் சிங்.. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் பரிசு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தான் – முக.ஸ்டாலின் கருத்து

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவிய காலம் தொடங்கி மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருக்கும் சாதக பாதக அம்சங்களை திமுக சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. தற்போதும் அரசின் நடவடிக்கையை விமர்சித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா நோய் தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும். கொரோனா பேரிடரை காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தை சீரழித்தது போதும். வருமானத்தை இழந்து, வேலையை இழந்து, தொழிலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு..!!

‘செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,  நோய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னை அணியில் மேலும் ஒரு இளம் வீரருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இ பாஸ் ரத்தா? – முதல்வர் சொன்ன அதிரடி பதில்…!!

இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. மத்திய உள்துறை அமைச்சகம் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென அறிவுறுத்திய பிறகும் தமிழகத்தில் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.. இது பற்றி பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் இ பாஸ் ரத்து செய்யப்பட்டு விட்டால் கொரோனா தாக்கம் அதிகமாகும் என்றும், சிலர் இ பாஸ் நடைமுறையே தொடரவேண்டும் என்றும் கருத்துக்களை  கூறி வருகின்றனர்.. இதனால் இ […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் – ஆட்சியர் அதிரடி..!!

புதுச்சேரியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. இதனை தடுக்க அனைத்து மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. மேலும் அனைத்து மாநிலங்களிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் 7 நாட்கள் முழு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? – வெளியான முக்கிய தகவல்.!!

பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டன.. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – நாளை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்..!!

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. அதில், குடிமகன்களுக்கு முக்கியமாக மதுபானக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.. அதன்படி, டாஸ்மாக் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு – மெட்ரோ, மின்சார ரயில்களுக்கு அனுமதி?

4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டே இருக்கின்றன.. இந்நிலையில் 4ஆம் கட்ட ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “காலை நீட்டி தூங்கிய மாணவன்”… வைரலாகும் போட்டோ..!!

ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போது சிறுவன் ஒருவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து தூங்குவது போன்றபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறன. இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,500 கொடுத்து… “தந்தை முகத்தை பார்த்த மகன்”… அதிகாரிகளின் செயலால் அதிருப்தியடைந்த மக்கள்..!!

ரூ 2,500 ரூபாய் பணம் கொடுத்து கொரோனாவால் இறந்த தனது தந்தையின் முகத்தை மகன் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரபடுத்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் […]

Categories
உலக செய்திகள்

7.33 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு… இது என்ன சோதனை… இனி என்ன தான் நடக்கும்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டி உள்ளதால் உலகநாடுகள் அச்சத்தில் உள்ளன.. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 8 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒரே வழி மருந்து கண்டுபிடிப்பது தான் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாவட்டத்தில்… என்ன செய்யலாம் ? ஷாக் ஆகி புலம்பும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2.50 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை மறுநாளோடு  ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் 3.30 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் மாவட்டங்களில் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?  மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் என்ன ? என்பது குறித்த விஷயங்களைக் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு. இந்த ஆலோசனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு….. தைரியத்துடன் போராடுறீங்க ….. மோடி பெருமிதம் …!!

உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.   நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைகப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேயொரு ஃபேன், ஒரு லைட்…. “ஆனால் கரண்ட் பில் ரூ 1.25 லட்சம்”… பேரதிர்ச்சியடைந்த பெண்மணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு 1.25 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஒரு பக்கம் சமானியர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரது வீட்டுக்கு ‘கரண்ட் பில்’ மூலம் ஒரு பெரும் சோதனை வந்துள்ளது.. அதாவது மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியைச் சேர்ந்தவர் துல்சா சோதியா என்ற பெண்.. இந்த பெண்ணின் வீட்டில் ஒரேயொரு மின்விசிறி மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர்… பொதுமக்கள் அச்சம்.!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில், 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…. சமளிக்குமா மத்திய அரசு ? புலம்பும் மக்கள் …!!

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார். ‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுவரை இல்லாத அளவு… ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா… மாவட்ட மக்கள் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சென்னையில் தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு எடுத்த தளர்வில்லாத பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்ட முயற்சியின் காரணமாக பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே குறைந்து காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியை தூக்கிய கொரோனா…. இதுவரை இல்லாத அதிர்ச்சி….!!

கடந்த நான்கு மாதங்களாக தமிழகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. இதன் கூடாரமாக விளங்கிய சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்,  உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனா பாதிப்பு மக்களை துயரத்துக்கு தள்ளி இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையில் பலரும் குணமடைந்து வீடு திரும்பி வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத உச்சமாக தூத்துக்குடியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்ட கோவை ஆட்சியர்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, தன்னைத்தானே வீட்டில் 5 நாட்கள் வரை அவர் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.. அதன் பின்னர் வழக்கம்போல் தன்னுடைய பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் மதுரை – மகிழ்ச்சியில் மக்கள்.!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலதினங்களாக மெல்ல குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது.. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வந்தது.. அதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வந்தது.. மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் கவலை..!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அதாவது, 117 நாட்களுக்குப் பிறகு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘மாஸ்க்’ அணியாவிட்டால் 6 மாதம் சிறை – அதிரடி உத்தரவு..!!

உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் சிலர் அதனை முறையாக பின்பற்றாமல் நமக்கென்ன என்று அசால்ட்டாக சுற்றி திரிகின்றனர்.. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தேனி மதுரை மாநில செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – பெரும் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில்  245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாநிலங்கள்..!!

இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதனுடைய  பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இந்த கொடிய கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் வெகுவாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகள்… “2000 பேர் missing”… பொதுமக்கள் அச்சம்..!!

10 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காணாமல் போய் விட்டதாக  சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் கொரோனா ரேபிட் டெஸ்ட்  நடத்திய பின்னர், கடந்த 10 நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக  அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அனைவருமே சோதனைக்கு வரும்போதே போலி முகவரியும், போலி தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா..!

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.. அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிப்பு இருப்பது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் காவலர் உயிரிழப்பு… ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

கொரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு சொந்த பணத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில், கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அய்யனார்(42) என்பவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளதையடுத்து, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்குப் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் – அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும்  4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மரணம்… “ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சடலம்”… கேள்வியை எழுப்பும் சம்பவம்..!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவல சம்பவம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாள் தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 350-க்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் உடல்களை நெருங்கிய உறவினர்கள் தவிர மற்றவர்கள் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. உடல்களை தொடுவதற்கும் அனுமதி கிடையாது. பாதுகாப்பு கவச உடையணிந்து ஆம்புலன்ஸ் மூலம் தான் அடக்கம் […]

Categories
அரசியல்

இன்று ஒரேநாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

இதுவரை இல்லாத உச்சம்…. இன்று மட்டும் எகிறிய உயிரிழப்பு… பொதுமக்கள் வேதனை …!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1800யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.30 லட்சம் பேர் கொரோனாவால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 3,965 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,34,226 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரசியல்

#BREAKING:தமிழகத்தில் 19மாத குழந்தை உட்பட 64பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 1800ஐ கடந்தது …!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1800யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.26 லட்சம் பேர் கொரோனாவால் […]

Categories
அரசியல்

இன்று ஒரேநாளில் 4,163 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 3,680 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,30,261 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா கவச உடையை கவ்விச்செல்லும் நாய்… பொதுமக்கள் அச்சம்..!!

கொரோனா பாதுகாப்பு கவச உடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா ‘டி’ அரங்கில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்கள். இவர்கள் உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்கிருக்கும் ஒரு பெட்டியில் […]

Categories

Tech |