காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]
Tag: Coronavirus.Covid19
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக […]
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]
ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. […]
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.245 கோடி பெறப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதை போல, அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. அதில், பெரிய நிறுவனங்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.130 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்து. நாடு […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். […]
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. […]