அமெரிக்காவில் வாகன உதிரி பாகங்களால் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என்று பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ்.இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அனைத்து நாட்டு மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் தற்போது முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
Tag: #coronavirus
கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]
ஹாலிவுட் நடிகை லீ ஃபியெரோ (Lee Fierro) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ (“Jaws,”) திரைப்படத்தில் […]
கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]
மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 […]
30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறைவு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றார். மேலும் […]
கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும், […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு […]
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் […]
தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இன்று இரவு 9 மணியளவில் உலகிற்கு காண்பிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ பதிவில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காட்ட (ஏப்ரல்5) இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைக்கும்படியும், 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, […]
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் இருக்கும் தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர் கரோலைன் சான்பை (Caroline Saunby) . 48 வயதான இவருக்கு 6 வயதில் ஜோசப் மற்றும் எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரது கணவர் பெயர் விக்.கரோலைன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளானவர்களில் 42 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வரம்புக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் 1,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் உயிரிழந்த நிலையில் 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மத்திய நல்வாழ்வு துறை இணைச் செயலர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]
ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]
நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
கொரோனா வைரசஸ் தொற்று பரவுவதை தடுக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் முதல்முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த ஆட்சியர், “வரும் 7ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தனியார் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது காட்டு தீயை போல வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 […]
நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். […]
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]
நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் எனவும், மளிகை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும் […]
அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]
பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]
பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் வேகமாகப் பரவிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு (இந்தியா) நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மக்களுக்கு […]
கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]
கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]
டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பெரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா என்ற அதிதீவிர புயலில் சிக்கி சுமார் 204 நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. முன்னதாக, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்திருந்தது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய […]
ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருகின்றது. இதனை இப்படியே விட்டுவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்தித்துவிடும் என்பதால், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மதிய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் […]
டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான அவருடைய கணவரும் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் பெண் டாக்டர் (48 வயது) ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்த […]
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில், வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 2,45,193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் […]
ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
கொரோனாவுக்கு எதிராக நாம் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்றியதில், கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் […]
மார்ச் 24ஆம் தேதி நாட்டு மக்களிடம் பேசிய போது 21நாள் ஊரடங்கு அறிவித்த பிரதமர் மோடி தற்போது மீண்டும் மக்களிடம் கொரோனா குறித்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடிஅதில் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாய் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நடத்தியதற்கு நன்றி . ஏப்ரல் 5-ல் இரவு 9 மணிக்கு மின்சார […]
உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் […]
கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மூத்த IAS அதிகாரிகள் […]
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]
ஆஸ்திரேலியாவில் ஆசிய சகோதரிகள் இருவர் மீது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆசிய பெண்ணான 23 வயதான சோபி டூ மற்றும் அவர் சகோதரி 19 வயதான ரோசா டூ ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உள்ளூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகில் வந்தார். பின்னர் […]
மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் […]
ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு […]
90’s கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து DD தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் […]
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வோரு பாஜகவினரும் ரூ. 100 வழங்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]
டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 1,500 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு […]