தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லையெனவும் ; 1,927 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒருமாத காலமாக உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இதுவரை 908 பேரை பலிவாங்கியுள்ளது. மேலும் இந்த வைரஸ் இந்தியா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவி பீதியைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கண்காணிப்புக் குறித்த தகவலில், […]
Tag: #coronavirus
சீன அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணொலிக் காட்சியொன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தக் காட்சி கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கிறது என்றால் அது மிகையல்ல. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900த்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் […]
சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். […]
கொரானோ வைரஸ் பாதித்த வுகாண் மாகாணத்தில் இருந்து 5 மில்லியன் மக்கள் மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரானோ வைரஸினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சீனாவின் வுகான் மாகாணத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் தீடிரென மாயமாகி விட்டதாக வுகாண் மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ஊடகமான ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கொரானோ வைரஸ் வுகாண் மாகாணத்தில் மிக வேகமாக பரவி , பல நூறு […]
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை சீனாவில் 906 பேர் மற்றும் பிற நாடுகளில் 2 பேர் என மொத்தம் 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரானா வைரசுக்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. ஆனால் […]
சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதலை உலகுக்கு அம்பலப்படுத்தி வந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தான் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் சீனாவில் இருந்து ஊகான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அந்த நகருக்கு சென்ற சென் கியுசி […]
உலகை அச்சுறுத்திய ஜாஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை விட கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய ஜாஸ் வைரஸ் 724 பேரை பலிகொண்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய குவைத் மாகாணம் மட்டும் இதுவரை 780 பேர் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு […]
சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்தமருத்துவ கண்டுபிடிப்புக்கு ஆராய்ச்சியாளர்களின் குழுவை இந்தியாவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழிநடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனாவிலிருந்து மெல்ல, மெல்ல இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா வைரஸ் தன் பயணத்தை தொடங்கியது. நோய் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சார்ஸ் தொற்று வைரஸ் பலி எண்ணிக்கையை தாண்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வைரஸ் பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை […]
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாங்கோலின் (ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) என்ற விலங்கிடமிருந்து பரவ வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே அதிகம் கடத்தப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக பாங்கோலின்கள் (ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) கருதப்படுகிறது. இந்த விலங்குகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மருத்துவ குணத்துக்காகவும், உணவு உற்பத்திக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு ஆய்வின்படி, பாங்கோலின்களிலிருந்து பிரிக்கப்பட்ட திரிபு மரபணு வரிசையானது […]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் தளர்த்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளத்திலும் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத சூழலில், முன்னர் அறிவித்த மாநில பேரிடர் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 3,399 பேருக்கு […]
சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைராஸால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது குறித்து சர்வதேச டோக்கியோ ஒலிம்பிக்கின் முதன்மை அலுவலர் தோஷிரோ முடோ கூறியுள்ளார். சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் […]
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்திற்குரிய ஏழு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘ சீனா மற்றும் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இங்கு வந்த 13 […]
மலேசியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் தெரியும். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் முதலில் பரவ தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு சரசரவென வேகமாக பரவி விட்டது. எப்படியாவது கொரோனா பரவுவதை தடுத்துவிட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமாக மருத்துவ […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா […]
சீனாவில் பரவிவரும் கொரோனா பீதியால் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதால், கவனிக்க ஆளின்றி மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 492 ஐ எட்டியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில். இந்த உயிர்க்கொல்லி நோயால் சீனாவில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவலின் மையமாக உள்ள ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் ஹூவாஜியாஹே நகரை சேர்ந்த யாங் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்விதமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத்தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சீனாவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரளா மாநிலத்தில் மூவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக கேரளா அறிவித்துள்ளது. நோய் தொற்றை […]
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவியது. அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு வெளியே ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் சீனா சென்று வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவும் சீன […]
பஞ்சாப் பிரித்கார்டு நகரில் உள்ள மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்றவர் ஓடியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவை உலுக்கிய கொரானோ பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் உள்ள 3 மாணவர்களுக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மாநிலங்கள் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை கூடுதல் கவனமுடன் இருந்து வருகின்றது. இந்நிலையில் பஞ்சாப் […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் […]
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன கால்பந்து கிளப் அணிகள் ஆடவுள்ள ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். […]
கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாநிலத்தை பேரிடராக அறிவித்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தங்கி படித்த கேரள மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா உறுதிபடுத்தினார். […]
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு […]
கொரோனா கொடூர வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் […]
சீனாவில் ரங்கூன் மல்லி கொரோனாவை கட்டுப்படுத்தும் என அந்நாட்டு மக்கள் வேகமாக படையெடுத்து அந்த மருந்தை வாங்க படையெடுத்தனர். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் […]
சீனாவின் ஹுகயான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது . இன்று ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது.நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நொடியே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். அந்த பகுதியில் பயணம் செய்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார்கள். இந்த […]
சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் அரசு மீட்டு வர மறுத்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் : சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் சுமார் 361 பேரை காவு கொண்டுள்ளது. அங்குள்ள உகான் மாகாணத்தில்தான் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பலர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். கொரோனா தாக்குதல் காரணமாக அந்த உகான் நகரம் ஒரு தீவுபோல் ஆகி விட்டது. அங்கு வெளியாட்கள் […]
கேரளாவில் 3ஆவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. கேரளாவில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இரண்டு பேருக்கும் நோய் தொற்று உறுதியாகியநிலையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா […]
சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுள்ளது. சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. தற்போது ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், […]
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]
கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தங்களுக்கென்று இந்திய ராணுவத்தின் சார்பில் ஒதுக்கப்பட்ட தனி முகாமில் ஆடி, பாடி மகிழ்ந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி […]
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , […]
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இந்தியா வழங்கி வந்த இ-விசா வசதி நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. தற்போது ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக […]
கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
சீனாவில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரை இந்தியா மீட்டுக்கொண்டு வந்ததற்கு அந்நாட்டு அதிபர் முகமது சோலி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காட்சி கண்கலங்க வைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு காரணம் வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.கேரளாவில் மாணவி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கேரளாவில் வைரஸ் தாக்குள்ளான மாணவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரக் கூடிய நிலையில் இரண்டாவது நபர் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு […]
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 304 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனாவில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 46 பேரும் சொந்த ஊர் திரும்பினர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
சீனாவில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க சென்ற சிறப்பு விமானம் 323 இந்தியர்களுடன் தாயகம் திரும்பியது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா […]
அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்குண்டான அறிகுறிகளுடன் நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார். சீன நாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் […]
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்பட ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30). இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க, கடந்த வாரம் ஹாங்காங் சென்ற சித்ரா நேற்று நள்ளிரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், […]
கொரோனா பரவியுள்ள சீனாவுக்கு இந்தியர்களை மீட்க இரண்டாவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 259_ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 259_ஆக […]
சீனாவில் சிக்கி தவித்த 324 பேரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]
கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி குற்றஞ்சாட்டியுள்ளார். உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து […]
கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை 1 விமானம் சென்ற நிலையில் இரண்டாவது விமானமும் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]