இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 937ல் இருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400, குஜராத்தில் 181, மத்திய பிரதேசத்தில் 120, டெல்லியில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027-லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. […]
Tag: #coronavirusinindia
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் […]
கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என […]
பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து, மாநில சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து மாநில அரசுகள் பரிசோதனை கருவிகளை வாங்கியிருந்தாலும், தவறான ஆன்டிபாடி சோதனை கருவிகள் அந்த நாட்டிற்கே திருப்பித் அனுப்பப்படும் என கூறினார். மேலும் மத்திய அரசு ஆர்டர் செய்த கருவிகளுக்கு இதுவரை ஒரு பைசா […]
நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]
ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் […]
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் […]