மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பான நிலை (Safe status) காட்டும்போது அலுவலகம் வர மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. […]
Tag: #CoronavirusLockdown
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]
பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் […]
தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து […]
தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்.. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும் வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]
கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் 65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் […]
மகாராஷ்டிராவில் கொரோனா லாக் டவுனின் போது மதுபானங்களை கடத்தியதாக இதுவரை 1221 வழக்குகள் பதிந்த்துள்ளன. மேலும், ரூ .2.82 கோடி மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மதுபானம் கடத்தியதாக இதுவரை 472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக மதுபானங்களை ஏற்றிச் சென்றதாக 36 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் […]
பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் […]
கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]
ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]
டெல்லியில் நடந்த தப்லீகி ஜமாஅத் மதநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1203 பேர் அடையாளம் காணப்பட்டதாக உத்தரபிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில், 897 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வந்த தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 42 பேர் டெல்லி தப்லீகி ஜமாத் அமைப்பு […]
கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]
கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மஹாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா […]
நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]
உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தோற்று குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கோவிட் – 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி முழுவதும் தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், குடியிருப்பு […]
உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பார்வையிட்டார். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. தோற்று நோய் அதிகம் […]
21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே 2 ஆவது முறையாக உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது வாரணாசி மக்களவை […]
கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார். அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]
இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]
பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம், எனவே ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் […]
ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். […]