சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒருபுறம் போராடி வருகின்றனர். மற்றொருபுறம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சலில் இருந்து நோயாளிகளை மீட்டுக் கொண்டு வருவதற்கான பணிகளை மருத்துவத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவருக்கு, மருத்துவர் ஒருவர் கேக் வெட்டி பிறந்தநாள் […]
Tag: CoronaWard
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 […]
சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]