Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,612 புள்ளிகள் சரிந்து 27,365 இல் வணிகம் ஆகிறது. வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் 2,600, நிஃப்டி 750 புள்ளிக்கு மேல் வீழ்ச்சியடைந்து 8,114இல் வணிகமாகிறது. கொரோனா பாதிப்பால் மற்ற ஆசிய பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க நேற்று மாலை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31ம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 14,613ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கவனம் தேவை… சட்டப்பேரவையை ஒத்திவையுங்கள் – ஸ்டாலின்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் நாளை முதல் சட்டப்பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட கூடாது. தினக்கூலி தொழிலாளர்கள், நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க மத்திய உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் ஊரடங்கு ; நாடு முழுவதும் கைதட்டல் ஒலித்தது – முதல் வெற்றி…. பிரதமர் மோடி நிகிழ்ச்சி!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை பாதுகாப்பாக கையாள அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்டுகிறது. மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்து 51 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு குணமானது. இதனால் தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு இருக்கிறது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : சுய ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் நாளை இயங்காதவைகள் என்னென்ன ?

கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை எவையெல்லாம் இயங்கும்? இயங்காது? என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இயங்காதவைகள் : தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : கேரளாவில் 52 ஆக உயர்வு… முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பொருளாதாரம் கடும் நெருக்கடி; கைதட்டல் மக்களுக்கு உதவாது…. ராகுல் காந்தி ட்வீட்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், தினக்கூலிகள் கடுமையான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே வைரஸ் பரவலை தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கைதட்டி கரகோஷம் செய்வதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், வெறும் கைதட்டல் அவர்களுக்கு உதவாது என குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் – மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து எப்படி பரவுகிறது? – வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியது

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 22 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளா டெல்லியில்  ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி – அரசு மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 271ஆக அதிகரிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 271ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது நிலவரப்படி கர்நாடகாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்களா?….. இலவச இணைய சேவை : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு!

வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதி – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தொடங்கியது. அதில், கொரோனா பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக 5 முறை அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை… எனக்கு திருப்தி அளிக்கிறது – பிரதமர் மோடி பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் நடைபெறாது!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் – ப. சிதம்பரம் ட்வீட்!

தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்” – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

 சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை […]

Categories
மாநில செய்திகள்

நாளை நமக்காக ஒரு நாள், அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த 9 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளோம். தேவைப்படும் போது பணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயா்வு – 4 பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23  பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: பிற மாநில வாகனங்கள் தமிழகம் வரத்தடை!

தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடக்கம். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் 31 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

22ஆம் தேதி அரசு பேருந்துகள் ஓடாது – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை – எல்லைகள் திடீர் மூடல்!

கொரோனா எதிரொலியாக நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர் ஏற்றிவரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி : சிறுதொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த கூடுதல் அவகாசம்?

கொரோனா பாதிப்பு காரணமாக சிறு குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் அவகாசம் தர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 32 பேர் வெளிநாட்டினர் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! 

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை  செய்து வருகிறார். காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து அந்த […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறு வரும் நிலையில் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியில் கொரோனா பரிசோதனை மையம் இருக்கும் நிலையில், இப்போது சேலத்திலும் இந்தப் புதிய மையம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 4 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5வதாக இம்மையம் சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களையும் மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று மாலை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – தமிழகத்தில் நாளை மறுநாள் கடைகள், உணவகங்கள் அடைப்பு… பால் விநியோகமும் இல்லை!

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் […]

Categories
மாநில செய்திகள்

சுமார் 2 லட்சம் பயணிகள் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் கொரோனா வைரஸ் தாக்கம் நாளும் நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒடிஷா, சத்தீஸ்கர் சட்டபேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? என கேள்வி எழுப்பிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? பேரவையில் ஸ்டாலின் கேள்வி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் நாளும் நாள் அதிகரித்து வருகிறது. வரும் 22ம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பையடுத்து ஒடிஷா, சத்தீஸ்கர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : தமிழக – கேரள எல்லை மூடல் ….!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்ட்டப்பேரவை நடைபெற வேண்டுமா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு – சுமார் 206 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் – இதுவரை 195 பேர் பாதிப்பு, 4 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 173ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 195ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஈரானில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸால் வைரஸால் பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார் பங்கேற்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை பீலா ராகேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148ஆக அதிகரிப்பு – சுமார் 2,23,065 பேர் பாதிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் அளித்துள்ளனர். அரசு உத்தரவு கிடைத்தவுடன் ஒரு சில மணி நேரங்களில் ழுமலையான் கோயிலை மூட முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயிலிலை மூடுவது தொடர்பாக ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் அடிப்படை வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அரசு உதவ வேண்டும் : ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழக அரசோடு மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என கூறியுள்ள அவர், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 168 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் – இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அரசு சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 […]

Categories
மாநில செய்திகள்

சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து 6 மாதங்கள் விலக்கு அளிக்க பேரவையில் துரைமுருகன் கோரிக்கை!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா உதவி மையம் செயல்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்கத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 166ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 147ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 166ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப் போகிறது – ராகுல் காந்தி ட்வீட்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Quick aggressive action is the answer to tackling the #Coronavirus . India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively. — […]

Categories

Tech |