Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பதிகளின் அன்பு… கணவன் இறந்த செய்தி… இரவே உயிரை விட்ட மனைவி…!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை-ராஜம்மாள் தம்பதி வசித்து வந்துள்ளனர்.  இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஏரியில் ஏழுமலை மீன் பிடித்தும்,  அவரது மனைவி ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்தும் வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சாதியால் அரங்கேறிய கொடூரம்.! காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி… தீ வைத்து எரித்த பெற்றோர்..!!

பண்டா மாவட்டத்தில் காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப காலத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் பெரும் தடையாகத்தான் இருக்கிறது. சாதி கடந்து காதலர்கள்  காதல் செய்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. பல போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் ஓன்று சேர்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவது […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

பாபநாசத்தில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் மீனா தம்பதியினர். அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று திடீரென மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முழுதும் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயினை அதிகம் பரவாமல் அணைக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரூபாய் 15 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாபநாசம் வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தீப்பற்றிய குடிசையை நேரில் பார்வையிட்டனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாபி-ரேஷ்மி வாழ்வில் இணைந்த மூன்றாவது நபர்….!!

கடந்த மாதம் வளைக்காப்பு முடிந்த நிலையில் பாபி-ரேஷ்மி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.பிறகு அடுத்த ஆண்டு மூத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை பாபி-ரேஷ்மி தம்பதியினருக்குப் பிறந்தது. இதைத்தொடர்ந்து நடிகை ரேஷ்மி நடிப்பிற்கு கேப் விட்டார். அதே வேளையில் நடிகர் பாபி சிம்ஹா பல படங்களில் கமிட் ஆனார். ரஜினியுடன் பேட்ட படத்திலும் காணப்பட்டார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”2_ஆவது பேபிக்கு தயார்” மீண்டும் அப்பாவாகும் பாபி சிம்ஹா ….!!

பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாக குழந்தை பிறக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மி மேனனுக்கு வளைக்காப்பு நடைப்பெற்றது. தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு முத்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இப்போது இத்தம்பதியினர் இரண்டாவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தரேன்…. பல கோடி மோசடி ….. பெண்களுடன் உல்லாசம் ….. தம்பதிகள் கைது …!!

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை தம்பதி வழக்கு” குற்றத்தை ஒத்துக்கொள்… மிரட்டும் காவல்துறை… ஊர்மக்கள் பகீர் குற்றசாட்டு..!!

நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும்  உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“யாரும் காரணமில்லை” சிக்கிய கடிதம்…. தமிழக பேராசிரியர் ஒடிசாவில் மனைவியுடன் தற்கொலை…!!

ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் மீண்டும் ஏசியில் மின்கசிவு” மூச்சு திணறலால் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை போரூரில் ஏசியில் தீ பிடித்ததால் புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சென்னை போரூரில்  மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர்  தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு மகன்கள் எந்த வித காயமுமின்றி உயிர்தப்பினர். ஏற்கனவே சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடி கைது….!!

ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில்  உள்ள தலைநகரான  தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு  இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த  தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த  அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு  அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]

Categories

Tech |