திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]
Tag: #Couples
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில், தம்பதியிடம் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவாயை சேர்ந்த காடப்பன், செல்வி தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். செல்விக்கு 45 வயதாகும் நிலையில் இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் […]
ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில் சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]