தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றும் சுகாதார செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து போடும் பணிகளை சுகாதாரத்துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித அவர் கோவிஷீல்டு கோவக்சின் ஆகிய இரு தடுப்பு ஊசிகளும் பாதுகாப்பானவை என தெரிவித்தார். நாட்டில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி குறித்தான சர்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Tag: #Covaxin
நார்வேயில் pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் நோய் தொற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசிக்கு மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? என்பது உறுதியாகவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைசர் தடுப்பூசியை நம் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இல்லை. உலகிற்கே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்திய […]
கொரோனா தடுப்பூசி வந்துடுச்சுனு யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீங்க என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடியே இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,இந்த நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுதனர் & விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மக்கள் சந்திக்க முடியவில்லை. இன்று நாம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு குடும்பம் மற்றும் ஒரு தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை உணர்கிறோம். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து […]
கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. நாடு முழுவதும் இந்த சோதனையில் சுமார் 26,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி நோய் […]