நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை […]
Tag: #COVID19.
மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில […]
கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]
காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் சென்றவர் மூலம் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குன்றத்தூரில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் […]
கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த 68 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு […]
சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில், டெக்கனிக்கல் பிரிவில் பணிபுரிந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 9 பேரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக சென்னை மாநகரம் திகழ்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை […]
இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம். ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி. பச்சை […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதவியல் துறையை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]
புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]
கரூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தநிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கரூர் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த கடைசி நபரும் நேற்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக […]
கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 நாடுகளை தாக்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் […]
சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் […]
பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]
இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகனம் ஓட்டும் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனேவே நுங்கம்பாக்கத்தில் காவல்நிலைய காவலர் ஒருவருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காவலர் மற்றும் உளவுத்துறை காவலருக்கு உறுதி செய்யப்பட்ட பின், நடந்த சோதனையில் ஆயுதப்படை காவலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை,கோயம்பேடு […]
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]
சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க […]
சென்னையில் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 கர்ப்பிணிப் பெண்களும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை […]
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் இதுவரை 560 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா சென்னையில் வீரியம் எடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் […]
குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]
ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]
நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி,வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா உணவகங்களில் நாள்தோறும் தரமான உணவுகளை தடையின்றி வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]
இந்தியாவில் 33ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,263 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 66 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. […]
தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]
கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதியவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த […]
மற்ற நாடுகளை விட அமெரிக்காதான் கொரோனா பரிசோதனையை விரைவாக செய்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவாக பரிசோதிப்பதால் தான் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல் மற்ற நாடுகள் பரிசோதிக்காததால் தான் பாதிப்பு குறைவாக இருப்பது போல் காட்டுகிறது என அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 […]
மே 3க்கு பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்த நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியவை பின்வருமாறு: * சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று […]
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 937ல் இருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400, குஜராத்தில் 181, மத்திய பிரதேசத்தில் 120, டெல்லியில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027-லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து […]
கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 […]
டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]
சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் […]
கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் […]
தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]
கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு […]