தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அடங்குவர்.. தமிழகத்தில் […]
Tag: #COVID19.
தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று […]
கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என […]
பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய முதல்வர், ” ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதத்தில் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் போரிடும் தருணத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் […]
பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30,03,229 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு […]
நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]
புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]
கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 342 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 4.24% ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 34வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தற்பொழுது, […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், தற்பொழுது, உலகளவில் கொரோனவால் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பிற விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் மாலை தோறும் சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு […]
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]
ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]
முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]
இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள […]
உலகளவில் கொரோனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 2,833,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை 1லச்சத்து 97 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தூண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]
நாடு முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,429 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகள் எண்ணிக்கை 723-ல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452-லிருந்து 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதில் 18,668 […]
அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]
கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது […]
பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து, மாநில சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து மாநில அரசுகள் பரிசோதனை கருவிகளை வாங்கியிருந்தாலும், தவறான ஆன்டிபாடி சோதனை கருவிகள் அந்த நாட்டிற்கே திருப்பித் அனுப்பப்படும் என கூறினார். மேலும் மத்திய அரசு ஆர்டர் செய்த கருவிகளுக்கு இதுவரை ஒரு பைசா […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில […]
கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் அதிவிரைவு கருவிகள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தற்போது பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வந்தது. சுமார் 6 லட்சம் ரேபிட் […]
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]
ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]
ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 778 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக 283 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழப்பிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.18 லட்சம் (2,718,699) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் www.meengal.com என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் மீன்களை ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மீன் வளர்ச்சித் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மீன்கள் என்ற செயலி வழியாக பொதுமக்கள் தரமான மீன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி […]
கடந்த 28 நாட்களுக்கு மேலாக சுமார் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு […]
நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]
நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]
அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]
அரசு அலுவலகங்கள் மே3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 33% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் […]
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. […]
ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் […]
தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 15 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று, அஜ்மீரில் 44, ஜெய்ப்பூரில் 66, பரத்பூரில், தயுசா மற்றும் சவாய் மாதோபூரில் தலா 1, ஜோத்பூரில் 3, கோட்டாவில் 6, நாகூரில் 4, டோங்கில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 328 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதேபோல் […]