குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் […]
Tag: #COVID19.
நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடத்த சில நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில், மீண்டும் […]
நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. அதேபோல மகே, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 14 நாட்களில் சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா […]
மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இந்தூரில் 110, போபாலில் 12, காண்ட்வாவில் 17 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரித்துள்ளது. அதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பேசிய சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், ” கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று யாருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. அதில் தற்போது, 23 பேர் […]
53 நாடுகளில் வாழும் 3036 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 25 பேர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 97 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. […]
மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]
இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் […]
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 கருவிகள் கைவசம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது; 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் […]
கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, ” நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதமே தமிழகத்தில் […]
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் […]
புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்த […]
தெற்கு டெல்லி பகுதியில் பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இதுவரை பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டெலிவரி செய்தவருடன் பணிபுரிந்த 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீத நோயாளிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதை நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,000 நெருங்குகிறது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]
வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் […]
தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியீட்டது. தற்போது கொரோனா பாதித்த மாநிலங்களில் 3வது […]
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய விதமாக, நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு […]
மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். […]
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக […]
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு […]
சென்னையில் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டது என தகவல் அளித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் […]
குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வர் உடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நேற்று கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உட்பட அனைவரும் […]
ராஜஸ்தானில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெளியான தகவலின்பிடி, சுமார் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேலும் 29 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் 15, ஜோத்பூரில் 7 மற்றும் கோட்டாவில் 7 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்பு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது.. இதனை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், நேற்று தமிழக அரசு ஏப்ரல் […]
பன்றி காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய WHO தலைவர் டெட்ரோஸ், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் நாட்டு படகில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் உள்ளிட்டவற்றை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களை ஏற்றும்போதும் இறங்கும் போதும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 58 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் […]
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
மஹாராஷ்டிராவில் மேலும் 121 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக இதுவரை 2,455 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை இன்று நீட்டித்தார். இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,541-ஐ எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 25 நிமிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மோடி, கொரோனா பாதிப்பில் இந்தியா 2ம் […]
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]
பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]
திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. மேலும், இன்று 9 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேருக்கு வெவ்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல மும்பையில் மட்டும் இன்று […]
புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]
சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக […]
திருப்பூரில் அதிகபட்சமாக இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் […]
நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார […]
அமெரிக்கா முழுவதும் ஊடரங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடித்துறை பெரிதும் பாதிக்கக்கூடும் நெருக்கடியில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஊடரங்கு உத்தரவால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்லாயிரம் பேர் வெளியிழக்கும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வல்லராக கருத்தப்படக்கூடிய அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 60 […]
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 82 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]
மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், […]
இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]