கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]
Tag: #COVID2019
பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் வேகமாகப் பரவிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு (இந்தியா) நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மக்களுக்கு […]
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் மார்ச் […]
கொரோனா அச்சுறுத்தலால் 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை […]