Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோனியோடு என்னை ஒப்பிடுவது சரியானதல்ல’ – வங்கதேச கேப்டன் அக்பர்

தன்னை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியோடு ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என யு19 உலகக்கோப்பையை வென்ற வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு வங்கதேச அணியின் முதன்மை மற்றும் முக்கியக் காரணமாக வங்கதேச கேப்டன் அக்பர் அலி இருந்தார். ஒருமுனையில் இருந்துகொண்டு முகத்தில் எவ்வித சலனமுமின்றி வலிமையான இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முகமது ஹஃபீஸுக்கான தடையை விலக்கியது ஐசிசி

பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது ஐசிசி விலக்கியது. 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த விடாலிட்டி பிளாஸ்ட் (vitality Blast) தொடரின்போது கள நடுவர்களால் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசும் விதம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு, அவருடைய பந்துவீச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசோதனை செய்தது. அதில் முகமது ஹஃபீஸின் முழங்கை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் கடந்து 15 டிகிரி விலகிச் செல்வதால், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சம்மந்தப்பட்ட போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உடல்தகுதியை நிரூபிப்பாரா இஷாந்த் ஷர்மா? – எதிர்நோக்கும் இந்திய டீம்

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இஷாந்த் ஷர்மா, அவருடைய உடல்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபிக்க அழைக்கப்பட்டுள்ளார். டெல்லி – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டியில் ஆடியபோது இஷாந்த் ஷர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனை ஸ்கேன் செய்தபோது, காயம் தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பையை மகளிர் அணி கைப்பற்றினால் புதிய வரலாறு படைக்கும்!

டி20 உலகக்கோப்பையை மகளிர் அணி கைப்பற்றினால், 1983ஆம் ஆண்டு கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மாற்றாத்தை இந்திய மகளிர் அணி மீண்டும் ஏற்படுத்தும் என மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராமன் தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டிற்கான டி20 உலகக்கோப்பைத் தொடர்தான் அடுத்ததாக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போதும் போல் அல்லாமல் இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை மீது அனைத்துத் தரப்பினரின் கண்களும்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் முழுக்க முழுக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநரானார் ராபின் சிங்

ஐக்கிர அரபு அமீரக கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்னதாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த டக்கி பிரவுனை நீக்கியது. அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். திடீரென பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஐக்கிய அமீரக அணியின் புதிய இயக்குநராக முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சரிந்த பும்ரா …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த பும்ரா,  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் பும்ரா 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிரட்டல் ஃபார்மில் இருக்கும் சர்ஃப்ராஸ் கான்!

மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கான் 169 ரன்கள் அடித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் குரூப் பிரிவு ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், குரூப் ஏ, பி, பிரிவுக்கான ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் மும்பை அணி, மத்தியப் பிரதேச அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஆர்ச்சர் அதனை எளிதாக செய்கிறார்” வியக்கும் ஸ்டெயின்!

கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் கடினமான விஷயம் வேகப்பந்துவீச்சாளராக இருப்பது தான். ஆனால் அதனை ஆர்ச்சர் மிகவும் எளிதாக செய்கிறார் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஸ்டெயின் வியந்துள்ளார். கிரிக்கெட்டில் எப்போதுமே பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களே அதிகமாகக் கொண்டாடப்படுவார்கள். ஆனால் வேகப்பந்துவீச்சாளருக்கான முக்கியத்துவமும், மரியாதையும் ரசிகர்களிடம் எப்போதும் இருக்கும். தற்போதைய சூழலில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை சர்வதேச ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இங்கிலாந்தின் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, இந்தியாவின் பும்ரா, ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் என சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கைகலப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்: கபில், அசார் சாடல்

வங்கதேச வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட இந்திய வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கபில் தேவ், அசாருதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி முடிந்தபின், இந்திய – வங்கதேச வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் களத்தில் ஓடிவந்த வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களிடம் சற்று எல்லை மீறி நடந்துகொண்டனர். இதனால், இரு அணிகளின் வீரர்களுக்கிடையே களத்தில் கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு திரும்புகிறாரா ஹர்திக் பாண்டியா?

காயம் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்களாக இடம்பெறாமல் உள்ள அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தற்போது மீண்டும் வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஹர்த்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தும் பாண்டியாவுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து லண்டன் சென்று அறுவை சிகிச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

17.2 ஓவர்களில் முடிந்த ஒருநாள் போட்டி… 35 ரன்களில் சுருண்ட அமெரிக்கா!

நேபாளம் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 35 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையில் இடம்பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியாக உலகக் கோப்பை இரண்டாம் டிவிஷன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், நேபாளம், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, நமிபியா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், நேபாளம் – அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேபாளத்தின் கிரித்திபூரில் இன்று நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபியை கலாய்த்த சாஹல், கேள்வியெழுப்பிய ஹர்ஷா போக்லே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்திலிருந்து முகப்பு படம் நீக்கப்பட்டது குறித்து இளம் வீரர் சாஹல், நக்கலாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தை செய்வது வழக்கம். ஐபிஎல் முதல் தொடரிலிருந்து பலம் வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன்களுடன் கூடிய அணியாக விளங்கும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை கைப்பற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2011 உலகக் கோப்பை இறுதிச் சுற்றை நினைத்து சிலிர்க்கும் சச்சின்!

2011 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற தருணத்தை நினைத்தால், இப்போதும் சிலிர்க்கிறது என இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்திய ரசிகர்களைக் காட்டிலும் சச்சினுக்கு நீண்ட ஆண்டுகளாக இருந்தது. அதுவரை தான் பங்கேற்ற ஐந்து உலகக் கோப்பை தொடரில் நிறைவேறாத அந்தக் கனவு, 2011ஆம் ஆண்டில் தனது ஆறாவது உலகக் கோப்பையில் அதுவும் சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : மகளிர் முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸி .சாம்பியன்

முத்தரப்பு மகளிர் டி-20தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணி. மெல்போர்னில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் ஆடிய மகளிர் அஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 66 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

முதல்நிலை பந்துவீச்சாளரான இந்தியாவின் பும்ரா, கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா – பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்’: யுவராஜ் சிங் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் நடந்தால், அது கிரிக்கெட்டுக்கு நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். முன்பு ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இறுதியாக, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேவிட் வார்னருக்கு ஆலன் பார்டர் விருது ….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் டி-20 போட்டியில் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பெயரில் விருது வழங்கப்படு வது வழக்கம். நடப்பாண்டிற்கான ஆலன் பார்டர் விருதை அதிரடிக்கு பெயர் பெற்ற தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றுள்ளார். வார்னர் ஆலன் பார்டர் விருது வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார். 2018-ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்திய பிரச்சனையால் ஒரு வருடம் தடையில் இருந்ததால் வெல்ல முடியவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: தகராறில் ஈடுபட்ட 5 வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிக்கு பின்னர் நடந்த தகராறில் ஈடுபட்ட ஐந்து வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யு19 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ப்ரியம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்துவந்த வங்கதேச பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

1952ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியில் ஆடிய வாக்கர் ஹசன் உயிரிழந்தார். அம்ரிஸ்டரிஸ் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் வாக்கர் ஹசன். 1952ஆம் ஆண்டு முதல் முறையாகப் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடியது. அதில் ஆடிய வீரர்களில் வாக்கர் ஹசனும் ஒருவர். அந்தத் தொடரில் ஆடிய வீரர்களில் வாக்கர் ஹசன் மட்டுமே உயிரோடு இருந்த நிலையில், தற்போது அவரும் நேற்று உயிரிழந்தார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஒருநாள் தொடரை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள் அல்ல’ – கோலி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த பின் பேசிய இந்திய அணி கேப்டன் கோலி, இந்தத் தொடரை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள் இல்லை என தெரிவித்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல் சதத்தால் 296 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி ஹென்ரி நிக்கோலஸ் (80), கப்தில் (66), […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் ரேங்கிங்ஸ்: டாப் 5இல் இடம்பிடித்த பாபர் அசாம்!

டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஏழாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ராவில்பிண்டியில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143 ரன்கள் அடித்தார். கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டி20 உலகக்கோப்பையில் நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிப்பார்’ – ஐசிசி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பந்துவீச்சாளர்கள் வீசும் நோ பாலை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார் என்று ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களால் வீசப்படும் நோ பாலை கவனிப்பதற்குத் தனியாக, ஒரு அம்பயரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எழுந்தது. இதற்கு முக்கியக் காரணம் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வீசப்பட்ட நோபால்களை மைதானத்தில் இருந்த கள நடுவர்கள் பார்க்கத் தவறியதே. மேலும், கடந்தாண்டு ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் செயல்பாடுகள் அசிங்கமாக இருந்தன – பிஷன் சிங் பேடி சாடல்!

யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி முடிந்த பின் வங்கதேச வீரர்களுடன் இந்திய வீரர்கள் நடந்துகொண்ட செயல்பாடுகள் அசிங்கமாக இருந்தன என இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி முடிந்த பின், இந்தியா – வங்கதேச வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இறுதி போட்டியில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் …!!

இந்தியா – நியூஸிலாந்து  மோதும் 3ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் …!!

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கைகலப்பு ஏற்பட்ட்து. 13-வது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தொடங்கியது. பயமரியா இளசுகளின் அதிரடி ஆட்டத்தால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா – வங்கதேச அணிகள் இறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியனான இந்தியா கத்துக்குட்டியான வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அசத்திய வங்கதேசம் இந்திய அணியை 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று கடைசி ஒருநாள் போட்டி ….!!

ஆறுதல் வெற்றியை ருசிக்குமா இந்தியா? நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது. டி-20 தொடரில் நம்மை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணியை ஒருநாள் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நசீம் ஷா ஹாட்ரிக்… வங்கதேசத்தை பந்தாடிய பாகிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவில்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 233 ரன்களும், பாகிஸ்தான் அணி 445 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143, ஷான் மசூத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு19 உலகக் கோப்பையின் சிறந்த அணியில் இடம்பிடித்த மூன்று இந்திய வீரர்கள்!

யு19 உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஷ்வால், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 13ஆவது யு19 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று நிறைவடைந்தது. பாட்செஃப்ஸ்டிரூமில் நடைபெற்ற இறுதி போட்டியில் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பை வென்று வரலாற்று படைத்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் அசத்திய 11 வீரர்கள் கொண்ட சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், இந்தியாவிலிருந்து மூன்று வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிதாலி ராஜ், மெக்கல்லம், கெயில் சாதனைகளைத் தகர்த்த நியூசிலாந்து வீராங்கனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த நபர் என்ற சாதனையை நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சோபி டிவைன் படைத்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும், மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வென்றிருந்தன. இதனிடையே நான்காவது போட்டியில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, டிக்னர் சேர்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3-வது போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிக்னர் நாளைய போட்டியில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெருந்தன்மையாக நடந்த கார்க்… மன்னிப்புக் கேட்ட வங்கதேச கேப்டன்…!

இறுதிப் போட்டியில் வென்றபின், எங்களிடம் வங்கதேச வீரர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதல்ல என இந்திய யு19 கேப்டன் ப்ரியம் கார்க் தெரிவித்துள்ளார். யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வங்கதேசம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலகக்கோப்பையைக் கைப்பற்றிய பின், வங்கதேச அணியினர் இந்திய வீரர்களுடன் அடிதடியில் ஈடுபட்டனர். இது சர்வதேச அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தோல்வி குறித்தும், வங்கதேச வீரர்களின் செயல்பாடுகள் பற்றியும் இந்திய கேப்டன் ப்ரியன் கார்க் பேசுகையில், ”இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் இங்கிலாந்து த்ரில் வெற்றி – சமனில் முடிந்த தொடர்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்தது. இங்கிலாந்து அணி கடந்த மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 எனக் கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதின. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற, இரண்டாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

யு19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தபின் இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், டி-எல் முறைப்படி வங்கதேச அணி 170 ரன்களை எட்டி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதனால், மிகுந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டம் – திரைப்பட பாணியில் தில்லு முல்லு காட்டிய இன்ஸ்பெக்டர்..! குற்றாவாளிகள் அடுக்கிய புகார் … விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!  

கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை: டாப்பில் இடம்பிடித்த யஷஸ்வி, பிஷ்னோய்!

யு-19 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். யு-19 தொடரின் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் வங்கதேச அணி கோப்பையைக் கைப்பற்றினாலும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அடுத்த இலக்கை நோக்கி பயணம்” – ஜெய்ஷ்வால்!

யு-19 உலகக்கோப்பைத் தொடர் முடிவுடைந்ததையடுத்து, அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக உலகக்கோப்பை சென்சேஷன் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். ஜனவரி 17ஆம் தேதி தொடங்கிய யு-19 உலகக்கோப்பைத் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இறுதிப் போட்டியில் வங்கதேச அணியிடம் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் 88 ரன்கள் குவித்தார். அதனோடு 6 போட்டிகளில் விளையாடி 400 ரன்கள் குவித்துள்ளதால் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இதனால் தற்போதைய இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இதுவெறும் ஆரம்பம் தான்” கோப்பையை வென்ற வங்கதேச கேப்டன்!

யு19 உலகக்கோப்பையை வங்கதேச மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும், வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சியில் இதுவெறும் தொடக்கப்புள்ளி மட்டுமே என வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அதர்வா பந்தை மிட்விக்கெட்டில் அடித்து வங்கதேச மக்களின் 20 வருடக் காத்திருப்பைப் ரகிபுல் போக்கினார். ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் முதல்முறையாக வங்கதேச உலகக்கோப்பையைக் கைப்பற்றியதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்த வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி பேசுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி… சில்லறைத்தனமாக நடந்த வங்கதேச வீரர்கள்…!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்தபின், இந்திய – வங்கதேச வீரர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் சீண்டல்கள் இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிகர்களிடையே போட்டியை சுவாரஸ்யமாக்கும். ஆனால் அந்த சீண்டல்கள் அதிகமானால் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம் அதிகமாகும். கிரிக்கெட்டில் சீண்டல்கள் நடப்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அடிதடியில் முடியாது. போட்டி முடிவடைந்த பின் சீண்டல்களில் ஈடுபட்ட வீரர்கள் கைகுலுக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஷ்ஃபயர் கிரிக்கெட் 7.7 மில்லியன் டாலர் வசூல் …!!

புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதியாக 7.7 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டும் நோக்கில் ‘புஷ்ஃபயர் பாஷ்’ கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் பாண்டிங் தலைமையிலான அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் மோதும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாண்டிங் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட்டின் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் இந்த அணிகளில் ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இந்திய இளம் வீரர்கள் சொதப்பல்” …. வங்கதேசம் சிறப்பான பந்து வீச்சு…!! 178 ரன் இலக்கு

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியின்  பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன் குவிக்க ஏனைய வீரர்கள் வங்கதேச அணியினரின் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி 4 இன்னிங்ஸ்….. 3 சதமடித்த பாபர் அஸாம்.. 2ஆம் நாள் முடிவில் பாக். 342 ரன்கள் குவிப்பு!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாளில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5 1/2 ஆண்டுகளுக்கு பின்….. மீண்டும் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்!

ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரியின் வேண்டுகோளை ஏற்று, சச்சின் இன்று ஒரு ஓவர் எதிர்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் தொடரில் பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுலகர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை செய்து வருகிறது. இதனை சாக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எல்லோருமே சிங்கம் தான் சார்… என்ன கொஞ்சம் வயசாகிருச்சு… ‘ – ரசிகர்களுக்கு விருந்து படைத்த புஷ்ஃபயர் கிரிக்கெட்!

புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியின் மூலம் இதுவரை 20 லட்சம் டாலருக்கும் மேலாக நிவாரண நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு, புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாண்டிங் தலைமையில் ஒரு அணியும் கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் கட்டமைக்கப்பட்டன. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினர். Ricky Ponting wanted a piece of […]

Categories
கிரிக்கெட் சேலம் மாவட்ட செய்திகள் விளையாட்டு

சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தோனி…

சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார். சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும்  போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கபில்தேவ், தோனியின் சாதனையை முறியடித்த ஜடேஜா!

ஒருநாள் போட்டிகளில் ஏழாவது வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனி ஆகியோரது சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கோலி, பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் சொதப்பிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, நவ்தீப் சைனி ஆகியோர் அணியின் வெற்றிக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் வருங்கால நட்சத்திரங்கள்!

யு19 உலகக் கோப்பை தொடர் மூலம், எதிர்வரும் காலங்களில் இந்திய அணிக்காக விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்து பார்ப்போம். யு19 உலகக் கோப்பை தொடரின் மூலம் இந்திய சீனியர் அணியில் என்ட்ரி தந்த வீரர்களில் சிலர் சிறந்த வீரர்களாக மாறியுள்ளனர். யுவராஜ் சிங், முகமது கைஃப் முதல் பிரித்வி ஷா, ஷுப்மன் கில் வரை இந்த பட்டியல் நீளும். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நாளை நடைபெறவுள்ள யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாளையப் போட்டியில் களமிறங்கும் சச்சின் – ரசிகர்கள் உற்சாகம்

கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீராங்கனையின் அழைப்பை ஏற்று அவரது நாளைய போட்டியில் பேட்டிங் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். உலகக் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்பட்டு வருபவர், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் புஷ் ஃபையர் போட்டியில் பங்கேற்கும் ரிக்கி பாண்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பகலிரவு டெஸ்ட்களின் முதல் செஷன் முக்கியமானது : சச்சின் டெண்டுல்கர்!

பகலிரவு டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் முதல் செஷன் மிகவும் முக்கியமானது என இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆர்வமாக உள்ளன. இதுகுறித்து சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீணில் முடிந்த ஜடேஜாவின் போராட்டம்… தொடரை இழந்த கோலி அண்ட் கோ!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்விடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷமி, குல்தீப் ஆகியோருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனியும் நாங்கள் கத்துக்குட்டிகள் இல்லை; மற்ற அணிகளை மிரட்டும் வங்கதேசம்

யு19 உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேச அணி முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளதை பலரும் வங்கதேசத்தின் அதிர்ஷ்டத்தால் நடந்தது என கருதுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தால் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. சிறப்பான ஆட்டத்தாலும், முழுமையான ஆதிக்கத்தாலும்தான் அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்கதேச அணி தற்போது பல ஜாம்பவான் அணிகளுக்கும் சவால் தரும்வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை […]

Categories

Tech |