Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்’ சிறுமியை சீரழித்த மாணவன் …!!

காளவாசல் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான 15 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். விடுதியில் மகள் தங்கி படிப்பதால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பதிவேற்றம் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரர்களுக்குள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மயிலாப்பூரில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூன்று பிச்சைக்காரர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

நான் கொல்லவில்லை… பிசாசுகள் கொன்றுவிட்டது… நாடகமாடிய கணவன் கைது..!!

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, பிசாசுகள் கொன்றுவிட்டதாக நாடகமாடியவரை காவலர்கள் கைது செய்து விசாரித்துவருகின்றனர். கர்நாடக மாநிலம் நிலமங்களா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்ஷிப் உல்லா. இவரது மனைவி ஹீனா கவுசர். இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மனைவி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலைசெய்யப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக ஹீனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ எப்படி இங்க வேலை பார்க்கலாம்… உருட்டைக் கட்டையால் அடித்துக் காவலாளி கொலை!

அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

ரூபாய் 17,00,000 வழிப்பறி …7பேர் கொண்ட கும்பல் …போலீசிடம் சிக்கினர்…!!

17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து  கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குழந்தைப் பாக்கியம் வேணுமா… நாங்க இருக்கோம்’ – நூதன மோசடியில் போலி மருத்துவர்!

பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”நகையை பறித்த கொள்ளையன்” கத்திய குளோரியம்மாள்….. தூத்துக்குடியில் பரபரப்பு ….!!

கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 19 பவுன் தாலிச் செயினை பறித்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘பைக்கில் மின்னல் வேகம்’ – இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகள்…. கணவன் உடலை பிரீசரில் வைத்த மனைவி… போட்டு தள்ளினாரா?

அமெரிக்காவில் கணவனின் உடலை 10 வருடமாக பிரீசரில் வைத்திருந்தது அங்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் இவரது  வயது (75).கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.சென்ற மாதம் ஜீன் 22ம் தேதி  சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை செய்த போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்தனர். வீட்டை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய நித்யானந்தா…….. மேலும் ஒரு குற்றச்சாட்டு……. தொடரும் லீலைகள்……!!!

 நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நித்தியானந்தாவினுடைய முன்னாள் சீடர் தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், நித்யானந்தா மீது புதிய புகாரை அளித்திருக்கிறார். புகார் மனுவில், தான் நித்தியானந்தாவின்  ஆசிரமத்தில் கடந்த 11வருடங்களாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும்  2015 ம் ஆண்டு நித்தியானந்தா என்னை வலுக்கட்டாயமாக  ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மனு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்………..5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது ……போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி…..!!!!!

போதைப்பொருள் பதுக்கிய  குற்றத்தில் 5 இந்தியர்கள் உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவி போட்டி… வங்கி மேலாளர் கொலை… 7 பேருக்கு சிறை..!!

ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது …!!

 நாகர்கோவில் அருகே கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார் . கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தச்சு வேலை செய்து வருகிறார்  .இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார் .இந்நிலையில் தகவலறிந்த போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர் .ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில்  இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது . ஐயப்பன் தினமும் குடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை எரித்துக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை …நீதிமன்றம் உத்தரவு…!!

சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்து எரித்துக்கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி  பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ,மதுரவாயலில் இளைஞரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன்நாதன் என்பவரது எறிக்கப்பட்ட சடலம் பல்லவர் நகர் காலி மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சத்யராஜ் ,முருகன், சதீஷ்குமார், ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. முருகனின் மனைவிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையே  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

12வயது சிறுமியை சீரழித்த முதியவர்… சரியான தண்டனை வழங்கிய மகளிர் கோர்ட்..!!

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய  55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை  மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை  செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த  நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை எரித்து கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கைது…!!

மனைவியை எரித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா  கடையுடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   வட்டிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயில் தீவிரம் காட்டி வருகிறது …!!

நிர்பயா  பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .   டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா  6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்  ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  இவர்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்….!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாப்பிளை ஆக ஆசைபட்ட இளைஞர்…. கம்பி என்ன வைத்த காவல்துறை ….!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன மாப்ள..!… தாலி கட்டுறிங்க….. அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 60 கிலோ வெங்காயம் கொள்ளை….!!

மயிலாடுதுறை காய்கறி கடையில் இருந்து 60 கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப் பணம் கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது     திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடைத்தரகர்களுக்குள் வாய்த்தகராறு…. கத்திகுத்தில் முடிந்தது….. !!

உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது. தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்!

மீனவர் கொலையில் குற்றவாளிகளை, உடனே கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி குருசுகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். நேற்று காலை, இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று காலை குருசுகுப்பம் மீனவர்கள், லோகநாதனின் உறவினர்கள் பட்டேல் […]

Categories
மாநில செய்திகள்

வெங்காயம் இறக்குமதி…. ”ரூ 8,00,000 மோசடி”….. பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன் அதிர்ச்சி …!!

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளனர். நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூபாய் 8 லட்சத்திற்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார். அப்போது, வெங்காயம் அனுப்பியவரின் வங்கிக் கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுநர் பிரகாஷ், தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கிக் கணக்கு எண் என நினைத்து, ரூ.8 […]

Categories
மாநில செய்திகள்

திருடர்கள் வசிக்கும் ஊரில் தீரன் பட பாணியில் சிக்கி மீண்ட போலீஸ்காரர்கள்..!!

சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டியார்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் 3ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர் . ஆட்டோ ராணிகள் தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு உதவுவது போல நடித்து அவர்களின் தங்கநகைகளை திருடி வந்தனர் .இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடு பட்டு வந்த இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ஆம் தேதி பெரம்பூரில்  ஒரு மூதாட்டியிடம் கைவரிசையை காட்டியதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ ராணிகள் […]

Categories
மாநில செய்திகள்

ரவுடி தப்பிஓட்டம் … தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்…!!

புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம்  கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் […]

Categories
உலக செய்திகள்

முகவரி கேட்ட பெண்ணின் மூளையை தின்ற நபர் கைது………!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மது போதையில் இருந்த ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொலை செய்து அப்பெண்ணின் மூளையை தின்றுள்ளார். இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு பகுதியில் ஆச்சரியமாக  செயல் நடந்து கொண்டே இருக்கிறது. அது,சிரிப்பை தரக்கூடியதாகவும் இருக்கலாம்,அல்லது நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம். அந்நிகழ்வுகள் எல்லாம் இன்டர்நெட் வாயிலாக  நம்மிடையே வந்து சேர்க்கின்றன.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மதுபோதையில் மிதந்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், அவரிடம் முகவரி கேட்டு வந்த பெண்ணை கொலை செய்துஅவளுடைய மூளையையும்  […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

(17) வயது சிறுமியை நண்பர்களுடன் கூட்டுபலாத்காரம் செய்த வாலிபர்….!!

திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்  பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]

Categories
சென்னை பல்சுவை

நூதனமான முறையில் திருடிய போலி ஐயப்ப பக்தன் கைது …!!

சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள்  என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3வயது குழந்தையை கொன்ற தாயின் 2வது கணவன் ..!!

இரு குழந்தைகளைகளுக்கு தாயானவளை திருமணம் செய்ததோடு அதில்  ஒரு குழந்தையை அடித்தே கொன்ற நபர் கைது .     சென்னை பள்ளிக்கரணை அருகே சீத்தாளப்பாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் ,அதே பகுதியில் கணவரைப் பிரிந்து 2குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் கங்காவை திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தார் வெங்கடேஷ் .சில நாட்களுக்கு முன் கங்கா தன் 3வயசு மகனான அருணை வெங்கடேஷிடம் விட்டு விட்டு கேரளாவில் சகோதரி வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உருவாகும் சிறுவர்களின் சேட்டை …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.   வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் …வழக்கறிஞர் கைது …!!

கோவையில் 14வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.   உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகம் கோவை மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற வழக்கறிஞர் ஆர்.எஸ் புறத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவ ,மாணவியருக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஸ் பாடம் இலவசமாக நடத்தி வந்துள்ளார் .இந்நிலையில் அங்கு  பாடம் பயில வந்த சிறுமியிடம் அவர் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

குடிப்பதற்கு தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது..!!

குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம்  கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய்  தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது  தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக  […]

Categories
தேசிய செய்திகள்

போரட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் டெல்லி முதல்வர் …..!!

உன்னாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .உயிர் இழந்த இளம்பெண் குடுப்பத்திற்குபிரியங்கா காந்தி நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார் . பாலியல் வன்கொடுமை கண்டித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் 70சவரன் தங்க நகைகள் கொள்ளை …!!

தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது .   கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டப்பகலில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனைவி எரித்து கொலை …!!

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி பட்டப்பகலில் மர்ம நபர்களால் எரித்துக்கொல்லப்பட்டார். விழுப்புரம் சுதாகர் நகரில் வசித்து வரும் நடராஜன் வெளியூர் சென்று விட்டு வீடு திருப்பிய போது அவரது மனைவி அடித்தும் ,எரித்தும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .நடராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் அவர் அணிந்திருந்த 8சவரன் அணிகலன் மற்றும் காதணி போன்ற ஆபகரணங்கள் கொள்ளை போனதை தெரிவித்தனர் .கொலை செய்யப்பட்ட இந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ச்சியாக நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு…..

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நடனம் ஆடாத காரணத்தால் பெண் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநித்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் அக்ககிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.இவருடைய மகளின் திருமணம் போன மாதம் நவம்பர் 30-ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் கச்சேரியுடன்,மட்டுமன்றி நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அன்று இரவு நடனக்குழுவை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடிக் […]

Categories
தேசிய செய்திகள்

என்கவுண்ட்டர் செய்த காவலர்களுக்கு ரூ.1,00,000 பரிசு..!!

ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும்  காவல்துறையினர்  என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேர் கைது …!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .   ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஐதராபாத்தில் தனியாக இருந்த தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!

அக்காவை பெண் பார்க்க வந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவரது தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .   உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நிலவி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த இரு சகோதரிகள் ஐதராபாத் அடுத்துள்ள நிஜாமாபாத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  தங்கி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் .இதில் அக்காவின் வயது 24 தங்கையின் வயது […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மேலும் ஒருவர் கைது… தொடரும் சிபிசிஐடி விசாரணை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு!

கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கின் விசாரணையை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை” 2 கொடூரர்கள் கைது …!!

ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

”பெண்ணை தாக்கிய தீட்சிதர்” பூஜை போட்ட நீதிமன்றம்…. ஜாமீனுக்கு ஆப்பு …!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன்ஜாமீன் […]

Categories

Tech |