சொகுசு வாழ்க்கை வாழ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவலர்கள் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் கடந்த 21ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு […]
Tag: Crime
தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அவர், […]
பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ் ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது, அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் பால்துரை இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் மது போதையில் தலைமை காவலர் […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜனனி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு முறை வீட்டை […]
தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் ஒருவர் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு […]
காதலனுடன் ஊர்சுற்ற பெற்ற குழந்தையை விற்பனை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை காவலர்கள் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷாமன் என்ற பெண்ணுக்கு 9 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விபின் என்பவருடன் திருமணத்தை தாண்டிய முறைதவறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து ஊர்சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பெண் தனது […]
அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]
வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]
திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உறவினர் […]
பெற்றத்தாயை பார்க்கச் சென்ற 9 வயது மகளை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல் சமது (37) இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அரப்புஸ்ரா (9) என்ற பெண் குழந்தையும், அகமது (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.அப்துல் சரிவர வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவ்வப்போது அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மும்தாஜ் தன் தாய்வீட்டிற்குச் சென்றதும், […]
கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக […]
தி. நகர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேனேஜரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் ஐந்து வழக்குரைஞர்கள் உட்பட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவேற்காடு அருகேயுள்ள சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் தி. நகரில் உள்ள எலைட் சரவணா தங்க நகைக்கடையில் கடந்த 3ஆம் தேதி பழைய தங்க நாணயங்கள் கொடுத்து மூன்று சவரன் செயின் வாங்கி உள்ளார் . […]
ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதுபோன்று இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்பச் சண்டை நடந்துள்ளது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். இதனையடுத்து எரியும் உடலுடன் பஞ்சவர்ணம் […]
அண்ணன் , தம்பி , சித்தப்பா என்று சொல்லி பல ஆண்களுடன் நெருக்கம் வைத்திருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து […]
காவல் துறைக்கு உதவி செய்து, மூன்று மாவோயிஸ்ட்டுகள் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கருதி, மாவோயிஸ்ட்டுகள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து […]
தருமபுரியிலிருந்து, பெங்களூருவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே குடிமைப்பொருள் வாணிபக்கழக தனி வட்டாட்சியர், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன், அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் […]
செல்போன் கடையில் திருடிய திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர். சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்கான்(37). இவர் பர்மா பஜாரில் பழைய செல்ஃபோன் விற்பனை, செல்ஃபோன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலையில் மீண்டும் வந்து கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், கடையின் உள்ளே சென்று பாத்தபோது […]
கள்ளக்குறிச்சி அருகே இரட்டிப்பாக பணம் தருவதாக 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தலைமறைவான கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த ஒரு கும்பல், அந்தப் பகுதி மக்களிடம் 100 நாள்கள் பணம் கட்டினால், கொடுக்கும் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி வசூல் செய்துள்ளனர்.இதில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துவந்த, அந்த ஐந்து பேர் […]
வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]
உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் என இச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு வந்த காலங்களில் துறவிகள், புலவர்கள் என அனைவரும் அனைவருக்கும் சொந்தம் என்ற நோக்கில் பெரும்பாலும் வெள்ளை உடைகளையே புகைப்படங்களில் வரைந்தோ, பொறித்தோ வைப்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகம் போற்றும் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை, காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விஷமிகள் […]
பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் […]
தஞ்சை பிள்ளையார்பட்டியைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்ததைத் தொடர்ந்து பாஜகவினர் பாலபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் […]
ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]
ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் […]
’அயன்’ பட பாணியில் வயிற்றில் மறைத்து தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட நிலையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கடத்தலில் தொடர்புள்ளதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணிகள் யாராவது தங்கம் கடத்தி வந்தார்களா என்று விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்துவந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த தெரசா (45), பாத்திமா (40) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் […]
திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]
‘திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவராகவே இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு: உள்ளாட்சித் தேர்தல்: கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் […]
திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலைக்குகு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி […]
பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் […]
வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவிதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் […]
திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]
பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் மூன்றடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம் , சாணி பூசி அவமானப்படுத்தினர். பெரும் ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் , தமிழ் […]
அம்பேத்கர், பெரியார் சிலைகளை அவமதித்த கயவர்கள், இப்போது வள்ளுவரையும் அவமதிக்கிறார்கள் என்பது, தமிழன் என சொல்லிக் கொள்ளவே வெட்கக் கேடாக இருக்கின்றது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறுகையில், “உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சாதி, மத எந்த அடையாளத்துக்குள்ளும் அடங்க மாட்டார். சமணர்கள் தங்களுக்கான அடையாளம் என்று திருவள்ளுவரை உரிமை கோருகின்றனர். பௌத்தர்கள் பெளத்தத்தின் அடையாளமாக திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று உரிமை கோருகிறார்கள். […]
சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதரங்கள் இருக்கும் மடிக்கணினியை சிறப்பு புலனாய்வுக்குழு கைப்பற்றியது. பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச […]
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொளத்தூரில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பொற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து நேற்று புகைப்படம் வெளியிட்டதற்கும், பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் ஏதாவது தொடர்பு […]
திருவள்ளுவர் போலத் தமிழுக்குப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, […]
திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கும் , பாஜக ட்வீட்_டர் பதிவுக்கும் தொடர்ப்பு இருக்குமே ? என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் […]
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது […]
மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் , 15 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியவர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]
தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]
கணவனின் செயல்பாட்டினால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண் பொறியாளர் (என்ஜினீயர்) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் பவானி. இவருக்கும் சுகித் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவ்வாறான நிலையில் சுகித்துக்கு வேறோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இது பவானியின் காதுக்கும் எட்டிய நிலையில்., […]
காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர். சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் […]
பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு […]
ரவுடியை மூன்று பேர் கொண்ட கும்பல் சாலையின் நடுவே ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை நடந்தது எப்படி? ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து […]
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு […]
வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் கூட்ட […]
மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம் பேசி, பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின்பேரில், பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் (58), அவரது மனைவி கண்ணகி(52) ஆகியோரின் இளைய மகள் சத்யா(22) திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துரை ராஜுன் சொந்த ஊரில் நல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த […]
அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]
ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]