Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

6 கிமீ….. நடுகாட்டில் கட்டில் பயணம்….. தாய்..சேய்… உயிர்களை காப்பாற்றிய CRPF வீரர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய அரசு பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.  சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மத்திய அரசு பாதுகாப்பு படையின் 85 ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர். அப்போது கிராமத்தின் அருகே மருத்துவமனையோ வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

மொத அங்க போங்க…. அப்பறம் இங்க வாங்க…. மத்திய பாதுகாப்பு பணிக்கு செக்…!!

பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில்  சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பாரமுல்லாவில் துப்பாக்கி சண்டை “தீவிரவாதி உயிரிழப்பு” போலீஸ் அதிகாரி வீர மரணம்..!!

ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.   ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள  ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF)  வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் […]

Categories
மாநில செய்திகள்

மண்ணுக்குள் புதைந்து கிடந்த இளைஞர் … உயிரை காப்பாற்றிய மோப்பநாய் ..!!

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார்  சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பெண் காவற்படையினருக்கு நவீன பாதுகாப்பு உடை… CRPF தலைமை இயக்குனர்…!!!

ஸ்ரீ  நகரில்  அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை  எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை  வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.   இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் முன் பாய்ந்த முதியவர்…அதிரடியாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டு..!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்த வயதான முதியவரை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பை ரயில்வே  நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான  முதியவர் ஒருவர், திடீரென்று  தண்டவாளத்தில் இறங்கி நடந்து  சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்கிறார்  என  பயணிகள் நினைத்து கொண்டிருந்த சமயத்தில்,  எதிர்புரம்  மின்சார ரயில் வருவதை கண்ட முதியவர், சட்டென்று  தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் முதியவரை காப்பற்றுமாறு  கூச்சலிட்ட நிலையில்,ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் புல்வாமா தாக்குதல்…..2 தீவீரவாதிகள் சுட்டுக் கொலை..!!

புல்வாமா பகுதியில் தீவீரவாதிகளுக்கும் இந்தியா ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று புல்வாமா தாக்குதலானது இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் 44 crpf ராணுவ வீரர்கள் குண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தனர் . இச்சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இந்தியாவில் முக்கிய பகுதிகளில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்களும், அவ்வப்போது பயங்கரவாத […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..?

ஒரே திருமண மேடையில் காதலி மற்றும் மனைவிக்கு  தாலி கட்டி திருமண செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தின் பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா . CRPF வீரராக பணியாற்றும் இவருக்கு  திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அணில் பைக்காரா விடுமுறைக்கு ஊர் திரும்பும் போதெல்லாம் அவரின் வீட்டருகே உள்ள அங்கன்வாடி காப்பாளரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலர்களாக நெருங்கி பழக்க ஆரம்பித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் “தேர்தல் ஆணையம் அதிரடி !!..

பலத்த பாதுகாப்புடன்  பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து,  ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories

Tech |