Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவலாளி” மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய “கொள்ளையர்கள்”… போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முருகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் பழைய இரும்பு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை முருகையன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் முருகையனை மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த முருகையன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

படிக்காமல் இதை செய்யலாமா….? பிளஸ்-2 மாணவியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த கௌரியை அவரது தாய் மங்களநாயகி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்…. பரிசோதனையின் போது “ஷாக்”கான டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற காதல் கணவர்…. கருகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இளையபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(25) என்ற மகன் உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், விஜயலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய விஷ்வா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஈரோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்த விஜய் தனது மனைவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருப்பாதிரிபுலியூரில் அதிகரிக்கும் குற்றங்கள்” வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள்…. வைரல் வீடியோ…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கம்மியம்பேட்டை சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரிடமிருந்த செல்போனை பறித்த போது அவர் சத்தம் போட்டும் பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த கார்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கார் ஓட்டுநரான தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ரூபினி(58), சரஸ்வதி(50) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிதம்பரம்- விருதாச்சலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கூரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி..?? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் 11-ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சூறையாடிய நபர்…. பள்ளியில் பரபரப்பு சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கையில் இரும்பு கம்பியுடன் பள்ளிக்குள் நுழைந்த வாலிபர் வகுப்பறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி, ப்ரொஜெக்டர், இன்வெர்ட்டர், கணினி, குடிநீர் எந்திரம் ஆகியவற்றை அடித்து உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது இரும்பு கம்பியால் அவர் ஆசிரியர்களை தாக்க முயன்றார். இதனால் ஆசிரியர்கள் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று விட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் சத்தம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

கடலூர் நோக்கி நேற்று தனியார் பேருந்து பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் பின் பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்த இயக்கியதால் பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்த்தப்பினர். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அக்காவுக்கு பிறந்த குழந்தை….. பார்க்க சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரிடம்…. “12 3/4 லட்ச ரூபாய் மோசடி” போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“போலியான பணி நியமன ஆணை” 8 லட்ச ரூபாயை இழந்த 4 பேர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவி…. நியாயம் கிடைக்குமா….??? பரபரப்பு சம்பவம்…!!!

ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வராணி வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். இவர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் விருதாச்சலம் போலீசாரும், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது செல்வராணி கூறியதாவது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்னை எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நோவா சாதனை படைத்த கல்லூரி மாணவர்….. குவியும் பாராட்டுகள்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூரில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோசப் கல்லுாரி பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வுக்கு பிறகு ஆகாஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில்…. சிறுவர் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் சி.வே கணேசன்….!!!!

ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டு புதிய சிறுவர் பூங்காவை அமைச்சர் சி.வே கணேசன் தலைமை தாங்கி திறந்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மேலபட்டாம்பாகத்தில் பேரூராட்சியின் சார்பாக சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும். மேலும் இதன் திறப்பு விழாவிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்துள்ளார். அதோடு எம்.எல்.ஏ வேல்முருகன் முன்னிலை வகித்துள்ளார். பேரூராட்சி மன்ற தலைவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வீடுகள்…. 2 மணி நேரம் கழித்து வந்த மின்வாரிய ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கூரை வீடுகளில் கட்டிமுத்து, ராஜவேல், அஞ்சலை, ரங்கசாமி, சக்திவேல் ஆகியோரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்ட 4 வீடுகளும் பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்த தீமைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடல் போல் காட்சியளித்த கூட்டம்…. புகழ்பெற்ற கோவில் கும்பாபிஷேகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க, யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. கொலை செய்யப்பட்டாரா….? வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

நெல் அறுவடை எந்திர உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கதிர்காமன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்காமன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது எழுத்தூர் ஏரி அருகே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்த வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்….!!

மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஸ்டேட் வங்கி அருகில் நரசியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலி(50) என்ற மனைவி உள்ளார். இவர் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு சென்று கமலிடம் ஒரு பழைய பத்திரிக்கையை கொடுத்து 20 ஜெராக்ஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு….. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கடலூரில் பரபரப்பு…!!

நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷின் மகன் ஆகாஷ்(24) என்பவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் இரும்பு பொருட்களை திருடி கடைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வாழ்க்கையை கழித்து வந்தனர். இந்நிலையில் இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாயை அழைப்பதற்காக சென்ற மகன்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி எல்.என் புரத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜ்குமார், ராஜ்கமல்(30) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜ் கமல் பெங்களூருவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு ராஜ்கமலுக்கு குணசுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமியும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி….. 41 மாணவர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 41 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விருதாச்சலத்தில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து விருதாச்சலம்- வேப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாணவர்களை ஏற்றுவதற்காக சாத்தியம் கிராமத்தில் நின்றது. அப்போது வேப்பூர் நோக்கி வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூரில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வீடுகள் ஆகியவற்றை கட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி விருதாச்சலம் வருவாய்த்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவிகள் பள்ளிகளிலோ அல்லது வெளியிடங்களிலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளிப்பதும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த 7 மாத கர்ப்பிணி…. காதல் கணவரின் வாக்குமூலம்…. கடலூரில் பரபரப்பு சம்பவம்…!!

7 மாத கர்ப்பிணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவாடி கிராமத்தில் அற்புதராஜ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அற்புதராஜ் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சக்தி அவரது தாயார் லதா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய வேன்…. இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்த ஓட்டுநர்…. மதுரையில் பரபரப்பு….!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து நெல் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு இடத்தின் அருகே இருக்கும் பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அதே சமயம் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை பொன்ராஜ்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ…. ரூ. 7 1/4 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 7 1/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூரில் மொட்டையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னட்டு(52), நல்லதம்பி(42) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று சின்னட்டுவின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ நல்லதம்பியின் வீட்டு கூரை மீதும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன்…. 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதுடைய மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மலர்விழி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் கருவூலத்தில் மாற்றுத்திறனாளியான சோழன்(45) என்பவர் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோழன் குளித்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனை அடுத்து ராஜன் வாய்க்கால் கதவணை மதகு அருகே சோழனின் மோட்டார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூரில் மணி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டிற்கு முன்பு பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை மணி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து மணி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் அடித்து கொலை…. இரட்டை சகோதரர்களின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டு காட்டு தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தண்டபாணி(54), ராமச்சந்திரன்(54) என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரட்டை சகோதரர்கள் ஆவர். கடந்த 2018- ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினரான பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யாறு(75) என்பவர் இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தம்பதியினர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…. கடலூரில் பரபரப்பு….!!

முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் தாமரைச்செல்வன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கனகராஜ்(44), அவரது மனைவி தனசெல்வி(34) ஆகிய இரண்டு பேரும் இணைந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நினைத்த கூலி தொழிலாளி…. மீனவர் அடித்து கொலை…. கடலூரில் பரபரப்பு…!!

மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன்பாளையத்தில் மீனவரான பன்னீர்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் கூலி தொழிலாளியான குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை யாரோ அடித்து விட்டதாக கூறி பன்னீர் தெருவில் நின்று திட்டி கொண்டிருந்தார். அப்போது தன்னை திட்டுவதாக நினைத்து குமார் பன்னீருடன் தகராறு செய்துள்ளார். மேலும் மரப்பலகையால் குமார் பன்னீரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் காயமடைந்த பன்னீரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…. கடலூரில் பரபரப்பு…!!

விஷ வண்டுகள் கடித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விஷ வண்டுகள் மாணவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட கல்லூரி பேருந்துகள்…. கோர விபத்தில் பலியான சிறுவன்…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எல்.என்.புரம் புதுநகர் பகுதியில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சகோதரியின் இளைய மகன் கவிசர்மா(5) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்ந்து படிக்க வைத்துள்ளார். நேற்று பள்ளி முடிந்ததும் ரஜினிகாந்த் கவிசர்மாவை அழைத்து கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் சம்பத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா(32)என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பானுப்பிரியா பெற்றோரை தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை அடுத்து பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று அக்கம்பக்கத்தினர் கருகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மிரட்டல் விடுத்த அண்ணன்…. மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

அண்ணன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் 32 வயது மாற்றுத்திறனாளி வாலிபருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதில் மணமகன் சென்னை ஐ.ஐ.டி-யில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோவில் கட்ட அனுமதி வேண்டும்” கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் மேலவீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வெளியே சென்ற ஜீவானந்தம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஜீவானந்தத்தின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. நகைக்கடை உரிமையாளர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் கண்ணன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கண்ணன் உறவினரது மணிவிழா நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக உயிருக்கு போராடிய பசு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா காவல் நிலையம் அருகே வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பசுமாடு கடந்த 2 நாட்களாக சேற்றில் சிக்கி உயிருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த கார்…. உயிருக்கு போராடிய டாக்டர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் அக்குபஞ்சர் டாக்டரான ராகவன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவனை விட்டு விடுங்கள்” இந்தியில் பேசி மிரட்டிய வாலிபர்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூரில் கிருஷ்ணமூர்த்தி(55) என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 21 பேர்…. கடலூரில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காலை 7 மணிக்கு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பொன்னேரி ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது அரியலூர் நோக்கி சாம்பல் லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். மேலும் லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த 2 வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சக்காங்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு வாலிபர்கள் தேவராஜின் மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]

Categories

Tech |