மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரக்கவாடி பகுதியில் வெங்கடாசலம்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்கல்பூண்டயில் இருக்கும் உதவி மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் சித்தூரில் இருக்கும் மின்மாற்றியில் பழுதை சரி செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக […]
Tag: Cuddalore
காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிரக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலைக்குள் புகுந்தனர். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு குழாய் மற்றும் தாமிரக் கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதுகுறித்து […]
நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். அந்தப் பெண் தனது புகைப்படத்தை செல்போன் மூலம் வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் உனது சொத்தை எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து […]
காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான நவீன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாசி முத்தான் ஓடை பாலத்தில் இருக்கும் கம்பியில் பிளாஸ்டிக் டியூபால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவர் முகநூலில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை செட்டிசாவடியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற கணவரும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனந்த் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவியை ஆனந்த் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த […]
சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, விருதாச்சலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மா.பொடையூர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுபத்ரா, சரண்யா, ஸ்ரீபிரியா, […]
தீ குண்டத்தில் தவறி விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரப்பேட்டையில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி பாதிரிகுப்பத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் முத்துக்குமார் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் தீ குண்டத்தில் தவறி விழுந்து வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள மூர்த்திகுப்பத்தில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷிற்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். எனவே சிறுமியின் தாயார் சுரேஷ் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கடலூர் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் கரிகாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தேவியும், உறவினரான அனிஷா என்பவரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த தேவி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு […]
மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி செல்வராணி, உறவினர் ஆறுமுகம், விஜய் ஆகியோருடன் ஒரு மொபட்டில் பூலாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ. அகரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபட் மீது […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் கரிகாலச்சோழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணியும், உறவினரான அனிஷா என்பவரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த ராணி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு […]
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆறுமுகம் ஆகியோருடன் பூலாம்பாடியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ.அகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து கருப்புசாமியின் இருசக்கர […]
பேருந்து மோதியதால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ரெட்டிசாவடி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்டிசாவடி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து ஷேர் ஆட்டோ மீது உரசி சென்றுள்ளது. இதனால் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை […]
10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்பாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வையற்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவியையும், குழந்தையையும் கவனித்துக் கொள்வதற்காக உறவினர் ஒருவரின் 10 வயது மகளை மணிகண்டன் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சங்கொலிகுப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் சங்கொலிகுப்பம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]
மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆனந்தமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து விட்டார். இந்நிலையில் மங்கையர்கரசி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ம.பொடையூர் கிராமத்தில் வசிக்கும் 20-க்கு மேற்பட்டவர்கள் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொட்டாரம் நோக்கி வேனில் புறப்பட்டுள்ளனர். இந்த வேனை கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் அதே வேனில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆவட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜி என்பவர் சாலையின் குறுக்கே நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது […]
பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தேசிங்கு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பேருந்தை முந்தி செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் பேருந்து டிரைவர் அவர்களுக்கு வழி விடவில்லை. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பெரியகாட்டுபாளையம் பகுதியில் வைத்து பேருந்தை முந்திச் சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி வழிமறித்தனர். அதன்பிறகு […]
5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எனதிரிமங்கலம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனசேகர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். […]
ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பீடர் ரோடு அருகாமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருவதால் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் வைப்பு தொகை உள்ளிட்ட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் காரணத்தினால் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ஐந்து பேர் இணைந்த குழுவினர் […]
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடமேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு 640 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் மேலும் வலுவடைந்து வடக்கு ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தற்போது கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூரில் உள்ள துறைமுகத்தில் புயலின் எச்சரிக்கைக்கான கூண்டை ஏற்றப்பட்டு […]
குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை 2 மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரைமேடு கிராமத்தில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ரகுவரன் மற்றும் ராஜராஜன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜவேல் மனைவி அம்பிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் இரண்டு மகன்களும் ராஜவேலுவை தட்டி கேட்ட போது மூன்று […]
2 நாட்கள் நடத்திய சோதனையில் 20 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கணேசன் மற்றும் காவல்துறையினரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடைய […]
தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து விட்டு விதவைப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் கண்ணபிரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் இறந்து விட்டதால் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நீலாவதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நீலாவதி தனக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் வீரமணி, அவரது […]
50 லட்ச ரூபாய் கேட்டு 2 பேர் ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம்குமார் என்ற வாலிபர் இவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் தொகையை திருப்பித் தருவதாக கூறி காளிமுத்துவை ராம்குமாரும், அவரது நண்பர்களும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். […]
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வீரப்பெருமாநல்லூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் மற்றும் ஜெயபால் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு கட்டையின் மீது மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு திட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற பிரபாகரன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நல்லான் பட்டினம் கிராமத்தில் இருக்கும் […]
மனைவி சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் தமிழ் செல்வன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தமிழ்செல்வன் […]
ஆற்றில் மூழ்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருச்சோபுரம் கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் மதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் உப்பனாறு பாலம் அருகே மதன் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக மதன் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனையடுத்து மதனின் நண்பர்களும் அருகிலிருந்தவர்களும் அவரை […]
தண்ணீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து 4 பேர் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை காவல்துறையினர் பூண்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் […]
இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராமாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். […]
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள உளுந்தம்பட்டு கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இறந்துவிட்டதால் சம்பூர்ணம் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சம்பூர்ணம் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]
பள்ளிக்கூட சமயலறையில் வாலிபர் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீரப்பாளையம் பகுதியில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கீழ பாளையத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சமையல் அறையில் வளாகத்தில் யோகநாதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
எண்ணெய் ஆலைக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் ஜோதி நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கம்மியம்பேட்டை மெயின்ரோட்டில் சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் ஊரடங்கு காரணமாக கடந்த 23ஆம் தேதி ஆலையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு தனது ஆலையை பார்ப்பதற்காக சதீஷ் நேற்று இரவு சென்ற போது அங்கிருந்த […]
திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் […]
பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுனாமி நகரில் சுப்ரமணியன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆனால் தற்போது இரண்டு மனைவிகளும் உயிரோடு இல்லை. இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் […]
மேல் அதிகாரி தொந்தரவு செய்த காரணத்தினால் கிராம ஊராட்சி மன்ற உதவியாளர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சந்திரசேகர் – மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாரியம்மாளை மீட்டுஅருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
அரசு மருத்துவர் சரியாக பணி புரியாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் மருத்துவர் மீது பொதுமக்கள் […]
வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திரங்கள் பெரியார் அரசு கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுதிள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் […]
வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு […]
குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம […]
1 1/2 மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழில் பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து […]
விவசாய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழை கொள்ளை கிராமத்தில் சேரன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 10 மாதமாக இவரால் சீட்டு பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேரனின் வீட்டிற்கு வந்த அந்த தனியார் நிறுவன மேலாளர் சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேரன் தனது […]
வரதட்சணை கொடுமையால் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் காலனி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் பேராசிரியராக ஆப்பிரிக்க நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரியும் செந்தமிழ்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 30 […]
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவரின் மகனான பிரவீன்குமார் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இங்கர்சால் என்பவரின் மகனான ஜெயசூர்யா என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி முடிந்து செங்கமேடு பகுதிக்கு பிரவீன் குமாரும் சூர்யாவும் மோட்டார்சைக்கிளில் […]
17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் […]
800 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள உச்சிமேடு, நெல்லிக்குப்பம், தாழங்குடா, நாணமேடு, திருமாணிகுழி, நடுவீரப்பட்டு, புதுப்பாளையம், கட்டார் சாவடி, வானமாதேவி ஆகிய இடங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி வகைகள், நெற்பயிர்கள் அங்கு பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி விட்டது. மேலும் அங்கு 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்ட […]
கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளது. அதன்படி வரலாற்றுச் சாதனையாக கடலூரில் இந்த கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் பெய்த கனமழை புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது என […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, மனமுடைந்த சுந்தரமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]