Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அலறி அடித்து ஓடிய தொழிலாளர்கள்… பற்றி எரிந்த முந்திரி தொழிற்சாலை… கடலூரில் பரபரப்பு…!!

முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தனி மாவட்டம் வேணும்… 25 வருட கோரிக்கை… மனித சங்கிலி போராட்டம்… தொடரும் என எச்சரிக்கை…!!

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வக்கீல்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கொண்டு மைக்கல் அம்பேத்கர் தலைமையில் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, சிவாஜி, புஷ்ப […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பார்த்த படம்… கண்டுபிடித்த சைபர் போலீசார்… கைது செய்யப்பட்ட எலெக்ட்ரீசியன்…!!

செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்த குற்றத்திற்காக எலக்ட்ரீசியன் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ் கடம்பூர் பகுதியில் சத்யராஜ் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சைபர் செல் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அப்போ நாங்க என்ன பண்ணுறது… கால்நடைகளுக்கு வழங்குவதாக குற்றசாட்டு… மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரசு விடுதியில் சரியாக உணவு வழங்கப்படாததால் கோபம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திட்டகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் திட்டக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு மீதமுள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… எங்கையும் தப்பிக்க முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாராயம் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… அதிரடி சோதனையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முதன்முதலாக இங்கதான் வச்சிருக்காங்க… பாராட்டக்கூடிய தரமான முயற்சி… குவியும் பாராட்டுகள்…!!

பெண் போலீசாருக்கு பயன்படும் வண்ணம் சானிட்டரி நாப்கின் எந்திரத்தை காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சானிடரி நாப்கின் வெல்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். எனவே ஆயுதப்படை பிரிவு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தனியா போனது தப்பா… வாலிபர் பெண்ணிற்கு செய்த செயல்… கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்…!!

தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காட்டுமன்னார்கோவிலில் அண்ணாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் புகுந்து வேட்டை… விற்பனை செய்யும் போது சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்…!!

மான் கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் காவல் நிலையத்திற்கு அங்குள்ள ஒரு கிராமத்தில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், அவர் மான்கறி விற்பனை செய்து கொண்டிருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் பரசுராமன் என்பதும், அவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தியவர்… விசாரணை கைதி செய்த செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சர்வீஸ் வேலைக்காக வந்திருந்த அஜித் என்பவர் இந்த சிறுமியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டார். இதனையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எக்ஸாம் எழுத ரெடியா இருக்கோம்… எங்களை கட்டாயபடுத்தாதீங்க… போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…!!

தேர்வு கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டதால், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… கலக்கப்பட்ட மருந்து… நோய் பரவும் அபாயம்…!!

கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதை அப்புறப்படுத்த வேண்டிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்டி பகுதியில் வெண்மலையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்திலுள்ள ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏராளமான விவசாயிகள் இந்த குளத்தின் அருகே உள்ள தங்களது விவசாய நிலங்களில் முந்திரி பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர். ஆனால் அந்த பயிருக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… பறிபோன வங்கி ஊழியர்களின் உயிர்கள்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வங்கி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் அஜய் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தார குப்பத்தில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து அஜய் சக ஊழியரான ரகுவரன் மற்றும் ரகுவரனின் அண்ணன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 லட்சம் மதிப்பு… 21 மூட்டைகளில் சட்ட விரோதமாக பதுக்கல்… தீவிர விசாரணையில் போலீசார்…!!

5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை 21 மூட்டைகளில் பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனிப்பிரிவு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் சுரேஷ், பாலமுருகன், ராஜசேகர் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் விருதாச்சலம் பங்களா தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் அங்க வெயிட் பண்றேன்… நூதன முறையில் திருடப்பட்ட கார்…. அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்…!!

நூதன முறையில் ஏமாற்றி காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோவிந்தசாமி நகரில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் விருத்தாசலம் தெரு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று ரவியிடம் கூறி வாடகை பேசி அவரை அழைத்து சென்றுள்ளார். இந்த காரானது இன்டீரியல் சாலையில் வந்தபோது, இருவரும் அங்கு உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எந்தவித முறைக்கேடும் நடக்கல…. கேமராவில் பதிவான தேர்வு… என்.எல்.சி நிறுவனம் விளக்கம்…!!

என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் பொறியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வானது என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நேர்முக தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளது. இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இன்னும் அதிகமா அனுப்புறோம்… குடிநீருக்கான முக்கிய ஆதாரம்… சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரி…!!

சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை பகுதியில் 47.50 அடி கொள்ளளவு உடைய வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து கிடைக்கும் தண்ணீரால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அதோடு இந்த வீராணம் ஏரியானது சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியோ தப்பிச்சாச்சு… காற்றின் வேகத்தால் கவிழ்ந்த படகு… கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள்…!!

படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வரும் குணசேகரன், தமிழன், வீரத்தமிழன் போன்றோரும் சிங்கார குப்பம் பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் இவர்களது படகு வந்து கொண்டிருக்கும் போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துவிட்டது. இதில் படகில் பயணித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கத்தி கூச்சலிட்ட காவலாளி… அடித்து பிடித்து ஓடியவர்கள்…காவல்துறையின் தீவிர தேடல்…!!!!

ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதான் காரணமா… எதுக்கு இப்படி பண்ணீங்க… குழந்தைகளை தவிக்க விட்ட தாய்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடி பாளையம் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கல்பனா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட ஐம்பொன் சிலை… மர்ம நபர்களின் கைவரிசை… கடலூரில் பரபரப்பு…!!

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி விருதாச்சலம் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. இங்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து சாமியை தரிசித்து விட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் சொன்னபடி செஞ்சாத்தான் சரியாகும்… போலி மந்திரவாதியிடம் சிக்கிய பெண்… மகளை குணப்படுத்த நினைத்து நடந்த விபரீதம்…!!

விசேஷ பூஜைகள் நடத்த வேண்டும் எனக்  சிறுமியின் தாயார் இடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியை சக்திவேல் என்ற மந்திரவாதி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை உண்மை என்று நம்பிய கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சம்மந்தம் இல்லாமல் தகராறு… சுவற்றில் தலையை ஓங்கி அடித்தவர்… கோவிலில் நடந்த அநியாயம்…!!

கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற  சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அந்த தப்ப நாங்கதான் பண்ணுனோம்…. வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால் முத்துக்குமரன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில், சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தகவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என் ஆட்டோவில் ஏற மாட்டியா…? மாணவிக்கு கொலை மிரட்டல்… கடலூரில் பரபரப்பு…!!

மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்கர நாயுடு தெருவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் நாகம்மன் கோவில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த கடலூர் மாவட்டத்திலுள்ள வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லா பக்கமும் சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்… வசமாக சிக்கியவர்கள்…!!

டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மருத்துவமனை புதுவை அரியாங்குப்பத்தில் குப்பத்தில் உள்ளது. இவர் தற்போது அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சின்னபகண்டையில் உள்ள வீட்டில் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாங்க எதிர்பாக்குறது இன்னும் நடக்கவில்லை… தொடர்ந்து போராடுவோம்… கல்லூரி மாணவர்களின் தீர்மானம்…!!

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரியில் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல், தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு அறிவித்த கட்டணத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் விட அதிகமா இருக்கு… மாற்றப்பட்ட கல்லூரி பெயர்… தமிழக அரசின் உத்தரவு…!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றியதோடு, அதன் பெயரையும் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமானது, அரசு கல்லூரியின் கட்டணத்தை விட  அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதார துறைக்கு கீழ் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொல்லுற பேச்ச கேட்க மாட்டியா… மகளை கண்டித்த தாய்… மாணவி எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கே. ஆடூர் பகுதியில் சினேகா என்பவர் வசித்துவருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அவரது தாய் அவரை கண்டித்திருக்கிறார். இதனால் விரக்தியில் மாணவி அவரது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தரிசனம் காண கண் கோடி வேண்டும்… நிலை கண்ணாடிக்குள் ஜோதி…. திரண்ட ஏராளமான பக்தர்கள்…!!

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனால் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பதற்காக திரளான பக்தர்கள் அங்கு குவிந்து விட்டனர். இந்நிலையில் காலை 6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றுள்ளது. அப்போது ஞான சபையின் நிலை கண்ணாடிக்கு முன்பு சிவப்பு, பொன் நிறம், கருப்பு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருவிழா தீர்த்தவாரி…. இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கோவில் திருவிழாவையொட்டி குளத்தில் நீராடிய மூன்று இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் லட்சபூபதி என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி, வினோதினி என்ற இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இதில் வினோதினி வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோகமயமான விடுமுறை… தவறி விழுந்த சிறுவர்கள்… கடலூரில் பரபரப்பு…!!

குளத்தில் தவறி விழுந்து இரட்டைக் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள இலங்கியனூர் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மணிமேகலை தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். அதன்பின் மணிமேகலையை பார்ப்பதற்காக அதே கிராமத்தில் வசித்து வரும் அவரது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க… ரோட்டில் அமர்ந்து தர்ணா…. திருநங்கைகளின் போராட்டம்….!!

தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்த சமயம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்று திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால் மணமக்கள் தரப்பினர் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மணமக்கள் தரப்பினருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…?? பெண் போலீசார் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த இரண்டு மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சரண்யாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் வெளியில் சென்ற தாய்… வழியில் நடந்த விபரீதம்… தவிக்கும் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை மீது டிராக்டர் மோதியதில் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நல்லான் பட்டினம் கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வர்ஷினி என்ற மகளும், விஷ்ணுவர்தன் என்ற மகனும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது மகளுடன் ஸ்கூட்டரில் புவனகிரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த மாணவி…. கடத்தி சென்ற டிரைவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

கார் டிரைவர் நர்சிங் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் 17 வயதுடைய நர்சிங் மாணவி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவியை சரவணன் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க… மனு கொடுக்கும் போராட்டம்…. விவசாய சங்கத்தினரின் கோரிக்கை…!!

விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கரும்புக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாயும், உளுந்து மணிலா பயிர்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும் நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை…. கால்வாயில் பிணமாக மிதந்த குழந்தை… அதிர்ச்சியில் பெற்றோர்… கடலூரில் பரபரப்பு…!!

ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகை கோட்டை பகுதியில் மணிவண்ணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரணியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெண்ணாடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்… கடலூரில் பரபரப்பு…!!

முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் புதுச்சேரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலுக்குள் பாய்ந்த பேருந்து…. அலறிய பயணிகள்… கடலூரில் பரபரப்பு…!!

அரசு பஸ் ஒன்று திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து சிதம்பரத்திற்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வரும் குபேந்திரன்  ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி அருகே உள்ள ரெட்டைகுலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் முக்கியம்… நகர வீதிகளில் ஊர்வலம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

கடலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போலீசார் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் இருசக்கர வாகனத்தை போலீசாருடன் ஓட்டி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், தன்னார்வ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய முதியவர்…. திடீரென செய்த செயல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

முதியவர் ஒரு ஹோட்டல் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி சாலையில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் குடி போதையில் ஒரு ஹோட்டல் முன்பு நின்று கொண்டு ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அணிந்திருந்த கைலியை கழட்டிய முதியவர், அந்த ஹோட்டலில் முன்பு உள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்போ குடுப்பீங்க… சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க… மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கீழநத்தம், வால்காரமேடு, கண்ணங்குடி மற்றும் ஆடூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியானது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தையை கவ்விய தெருநாய்… நெஞ்சை உலுக்கும் காட்சி… கடலூரில் பரபரப்பு…!!!

தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி கொண்டு வந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி அருகில், ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை தெருநாய் அதன் வாயில் கவ்விக் கொண்டு ஓடி வந்தது. அந்த நாயின் பின்னால் மேலும் மூன்று தெரு நாய்கள் வந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்பதற்காக கற்களைக் கொண்டு அந்த தெரு நாய்களை அடித்தனர். இதனால் அங்குள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரு குழந்தைகளையும் கொன்று…. தாய் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

தாய் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், விஜய் தண்டபாணி என்ற மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. நித்யா தனது பிரசவத்திற்கு வந்ததிலிருந்தே எஸ்.என். சாவடியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த ஆண் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கிறது வீராணம் ஏரி.. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் கரையோரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது..!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் செல்கிறது. மற்ற பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதையில் வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் மருத்துவமனைக்கு செல்ல […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இன்று கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]

Categories

Tech |