கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை சென்று திரும்பியுள்ளனர். இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]
Tag: Cuddalore
கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. […]
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]
திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]
சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]
அறந்தாங்கியில் உயர்நிலைப்பள்ளி பாதிரியார் மீது இரு ஆசிரியர்கள் பாலியல் புகார் அளித்ததால் அவர்கள் சிறைபிடிக்கபட்டனர். கடலூர் மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் பாதிரியார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகார் பற்றி மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பள்ளியின் முன்பு ஏராளமானோருடன் குவிந்து, பாதிரியாருக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் […]
குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர். தேனி […]
போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் […]
திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]
மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 […]
ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கிச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் […]
கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]
தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]
வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]
இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை […]
தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]
மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]
வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு […]
சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]
சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]
கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார் கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]
போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]
நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போதையில் இருந்த […]