கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]
Tag: #Customsofficers
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு […]
சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]