மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Categories