மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றவர்களை விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் […]
Tag: Daughter
சொந்த மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று பல பேர் முன்னிலையில் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 30 வயது அஹ்லம் (Ahlam) என்ற பெண் தான் தந்தையின் கொடூர செயலால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]
நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக் நாயின் மேல் […]
உ.பியில் 8 வயதான சொந்த மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் மிலக் தெஹ்ஸில் என்ற கிராமத்தில், 8 வயது சிறுமியை, அதாவது தன்னுடைய சொந்த மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அரங்கேறியுள்ளது.. சம்பவம் நடந்த அன்று அந்தச் சிறுமியின் தாய், அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.. பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அக்கம் […]
பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயத்துடன் கிடந்த மற்றொரு […]
தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடைய மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை அஞ்சலி நாயர் கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் பட ஷூட்டிங்குக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து மகிழ்ந்தார். அதேபோல போல் வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தற்போது […]
லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்ற பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஹரிஹரன்(24) என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவன ஊழியரான இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் என்பவரது மகள் கீதா சோப்ராவும் (19), காதலித்து வந்துள்ளனர்.. இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் […]
ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய திவ்யா என்பவர் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு காலேஜில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு […]
சிரியாவில் அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை அச்சப்படக்கூடாது என்பதற்காக, அவளின் கவனத்தை திசை திருப்புவதற்கு தந்தை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியா நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். குர்திஷ் போராளிகளின் வசமிருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை சிரிய அரசு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு […]
மகளை ஏமாற்றி கொலை செய்த காரணத்திற்காக மருமகனை கொலை செய்த மாமனார். திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மகளை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பூக்கடை நடத்தி வருகிறார். […]
போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தனது மகளை உறவினர் வீட்டில் ஒப்படைக்க வரும் தந்தை சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய கதையாக “தாய் நிலம்” படம் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பு பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படத்தை திரையிடுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகி வருகிறது. நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் […]
மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்த முருகேசனின் மனைவி சர்மிளா தனது 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவியும் குழந்தையும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மனைவி குழந்தையை தேடியுள்ளார் முருகேசன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என தந்தொனிமலை காவல்துறையினரிடம் புகார் […]
சீன அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணொலிக் காட்சியொன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தக் காட்சி கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கிறது என்றால் அது மிகையல்ல. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900த்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் […]
13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது. அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு. ஆண் பெண் சமம் பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய […]
மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]
பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]
பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]
பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு […]
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]
தோனியின் ஆட்டத்தை பார்த்த அவரின் மகள் ஸிவா அப்பா அப்பா என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தோனியின் அழகு மகள் ஸிவாவுக்கு தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ரசிகர்களும் ஸிவா_வுக்கும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம் . சில நேரங்களில் தோனி தனது மகளுடன் பேசும் , விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியாகிய அடுத்த நிமிடமே வைரலாகி விடும். இந்நிலையில் PL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி […]