அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]
Tag: Dead
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தில் யானைகள் மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
ஸ்ரீரம்பூர் பகுதியின் பெண் கவுன்சிலர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்க மாநிலத்தின் ஸ்ரீரம்பூர் நகராட்சியின் பெண் கவுன்சிலர் நாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், நீண்ட காலமாக அக்கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இத்தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, சந்தன்னகர் காவல் ஆணையர் ஹுமாயூன் கபீர் கூறும்போது, “தற்கொலை செய்துகொண்டவர் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள குடிமை அமைப்பின் வார்டு எண் 16இன் பெண் கவுன்சிலர் […]
அல்கொய்தா அமைப்பின் துணை தலைவன் குவாஸிம் அல் ராய்மி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாஸிம் அல் ராய்மி (Qasim al-Raymi0) தலைமையின் கீழ் இருக்கும் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் துணை தலைவன் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, […]
எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]
வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை […]
அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி முன்னாள் கவுன்சிலரின் மைத்துனரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்குப் அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, பின் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், […]
திருத்தணி அருகே 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்களூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை ஓன்று உயிரிழந்தது. அந்தோணி என்ற 4 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததபோது எதிர்ப்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழக குளத்தில் 21 வயதான இந்திய வம்சாவளி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன் ரோஸ் ஜெர்ரி என்ற 21 வயதான பெண் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில் ஜெர்ரி பல்கலைக்கழக குளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவர் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்ரியை காணவில்லை என பல இடங்களில் தேடி பார்த்தபின், புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்படி போலீசார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றி தேடிய […]
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் பலியானார். மற்றொரு மாணவிஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் மட்டும் […]
சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]
புஞ்சைபுளியம்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி […]
சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு […]
மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]
அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், […]
மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்கபோலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் […]
புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]
கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக […]
கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிவாசகம் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான காடையாம்பட்டி ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். மணிவாசகத்தின் […]
சென்னையில் அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் பலத்த காயமடைந்தனர். சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ […]
ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]
இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]
பாலாற்றில் தனது தாயுடன் கால்நடைகளைக் கழுவிக்கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடகரை பாலாற்று பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையால் சுமார் 10 அடியிலிருந்து 20 அடி மேல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக ஆம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளன. இதனை அறியாமல் வடகரை பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் […]
கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]
பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இளம் பாப் பாடகியாக திகழ்ந்தவர், வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுள்ளி என்று அழைக்கப்படும் பாப் பாடகியான சோய் ஜின் ரீ, தென் கொரியாவிலுள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.பாடகி, நடிகை, தொலைக்காட்சித் தொடர், ரியாலிட்டி ஷோ என கலக்கிவந்தவர் சோய் ஜின் ரீ. மேடை நிகழ்ச்சிகளில் சுள்ளி என்ற பெயரில் தோன்றும் இவர், தனது பாடல்களின் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.25 வயதாகும் […]
தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]
டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் […]
உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு […]
தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அங்குள்ள அரசு பங்களா பிரகதி பவனில் வசித்து வருகிறார். இந்த பவனில் 11 நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாதமான அந்த நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனுடைய உடல் கடுமையாக கொதித்தது. அந்த நாய் அப்போதும் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ள நிலையில் அதனால் பால் […]
இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]
இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழ, நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் […]
அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவிட்டுள்ளார் . முன்னதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்ற ஒரு பொறியியல் பட்டதாரி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து […]
பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். […]
இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை […]
உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள். அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே […]
மத்திய பிரதேசத்தில் முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கீழே தள்ளி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்ற பள்ளி மாணவி (18 வயது) 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தனது ஆண் நண்பருடன் பிஜாபுரி கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். வனப்பகுதியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர் […]
திருவள்ளுர் அருகே விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்த நிலையில், நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளுர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சம்பத்குமார் என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர் நரேந்திரன் (வயது 31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது சந்தானம் குருஜி என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் […]
ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]
மயிலாடுதுறையில் திருடன் ஒருவன் ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும் சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும் காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு குதித்துள்ளார். சுமார் 15 அடி […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது […]
தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]
சென்னையில் 74 வயது மூதாட்டி எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஜக்டியானி என்ற 74 வயது மூதாட்டியும் அவரது நண்பரும் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு அங்கிருந்த எஸ்கலேட்டரில் இவர்கள் இருவரும் ஏற முயன்றனர் அப்போது இவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் அங்கு இருவரும் தீவிர […]
பிறந்த நாளன்று 4 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய நண்பர்கள் அழைத்ததாக கூறி கடந்த கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்த 4 நண்பர்களும் அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து […]
காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர் கல்லூரியில் படிக்கும்போது நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. […]
திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த 7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]