சென்னை ஆவடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஆவடி அடுத்துள்ள சேக்காடு அண்ணா நகரில் வசித்து வந்த 62 வயதான ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனது கணவர் சுப்பிரமணி இறந்த பின்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் முருகன் என்பவர் அருகிலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்த மூதாட்டி மீது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து […]
Tag: Dead
2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]
டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார் கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் […]
டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பைக்கில் சென்ற போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியை சேர்ந்த 28 வயதான மாணவ் ஷர்மா (பொறியியல் பட்டதாரி) தனது தங்கைகளுடன் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதால் வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மா கழுத்து அறுபட்டு உயிரிழந்தார் என்று இருந்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக […]
மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் […]
காஷ்மீரை மூன்று மாநிலங்களாக மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த சில தினங்களாகவே ஜம்முவில் என்ன நடக்கின்றது என்று இந்தியா முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் பாத யாத்திரை தற்போது நடைபெற்று வருகின்றது. லட்சட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லும்பாதயாத்திரை வழித்தடத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்படத்தை தொடர்ந்து இந்த பதற்றம் தொடங்கியுள்ளது. […]
ஜம்முவில் உஷார் நிலையில் விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர் […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]
சென்னை நந்தனம் அருகே மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]
காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 101 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 50 இளைஞர்கள் வரை அங்கு மறைமுகமாக செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி 101 பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் பகுதியில் 25 பேரும், […]
திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார். கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை […]