காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]
Tag: # Death
கடனை அடைக்க முடியாத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி அருகே இருக்கும் வைகை நகரை சேர்ந்தவர் ஜெபராஜ் சாந்தி தம்பதியினர். சாந்தி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அவரால் சரியான நேரத்திற்குள்ளாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார் சாந்தி. இதனால் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கடனை அடைக்க முடியவில்லை என விரக்தி அடைந்து […]
பெண் மாடியில் இருந்து விழுந்து பலி
பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இலங்கையில் இருக்கும் கொழும்பு வெள்ளவத்தையில் 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கீழே விழுந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா […]
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான தபாஸ் பால் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் பெங்காலி திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் தபாஸ் பால். இவர் அரசியலிலும் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். தபாஸிற்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். மும்பையில் உள்ள தனது மகளை சந்திக்க கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார் தபாஸ். பின்னர் விமான நிலையத்திற்கு வந்தபொழுது தபாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் […]
விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தாயின் சேலை இறுக்கி சிறுவன் மரணம் அடைந்தான். நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயம் அருகே இருக்கும் முதலியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் அண்டோவிஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஆண்டோசப்ரின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விளையாட்டு மற்றும் படிப்பில் படு சுட்டியாக இருந்த ஆண்டோசப்ரின் நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். தனது தாயின் […]
துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து […]
பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முடிந்ததும் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் வேனிற்குள் அமர்ந்து இருந்த குழந்தைகள் பதறிப்போய் தங்களை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். உடனே வேனை […]
டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]
கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், நேற்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது […]
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். எந்த இடங்களிலும் பெண் அமையாத நிலையில் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி விரக்தியடைந்த மணிகண்டன் மாரியம்மன் கோவிலின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி அதில் இருந்த மின் கம்பி ஒன்றை பிடித்துள்ளார். இதனால் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]
நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அலெக்சாண்டர் உடன் படிக்கும் சக மாணவருக்கு பிறந்தநாள் காரணமாக பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்கு கேக் வெட்டி கொண்டாட சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்ததும் சட்டையில் ஒட்டிய கேக்கை சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கியுள்ளார் அலெக்சாண்டர். குனிந்து […]
இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா. காலையில் […]
விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணம். ஆவடியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி இவருக்கு யசோதா என்ற மகளும் சுமுகன் மற்றும் சுவேகன் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுமுகன் திடீரென காணாமல் போயுள்ளான். எனவே பெற்றோர் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஆவடி […]
தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்த சம்பவம் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியில் உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தமிழரசி தாம்பதியினர் இத்தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு லித்தேஷ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழரசி லித்தேஷிர்க்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை சளியினால் அவதிப்பட்டது தெரிந்தும் மருத்துவரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு ஊசி போட்டுள்ளார் செவிலியர். அதன்பிறகு […]
வீட்டில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை புழலை அடுத்த புத்தகரம் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணி தொழிலதிபரான இவர் சென்னை அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் ஒரே மகன் லண்டனில் படித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முத்து சுப்பிரமணியனின் மகன் சென்னை வந்துள்ளார் சென்னை வந்தது அடுத்த நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் மித்ரா. இந்நிலையில் வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குளாகி பலியானோர் எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் வேகமாக இந்த வைரஸ் பரவியது. இந்த வைரஸ் முதலில் பரவ தொடங்கிய உகானில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருந்தன. கொரோனா தொற்று வைரஸ்சின் […]
வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி. பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]
வள்ளியூரில் உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங். 75 வயதாகும் விவசாயியான பாலசிங் இன்று காலை அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பாலசிங் விபத்து ஏற்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளன். தமிழ்செல்வன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் அருகில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியில் தண்ணீரைக் கண்ட சிறுவன் தனது ஆடைகளை கழட்டி விட்டு குளிக்க ஏரியில் இறங்கியுள்ளார். தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாத சிறுவன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளன். […]
கொரோனா வைரஸ் நோயினால் சீனாவில் ,113 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பலி எண்னிக்கை அதிகரித்து உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீனாவின் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் தற்போது […]
நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம் தந்தை வீட்டிற்கு போ என […]
திருமணமாகி மூன்று மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மானூரிலிலுள்ள அயூப்கான்புரம் கோவிலை சேர்ந்தவர் ராமர் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், நேற்றைய முன் தினம் ராமர் தன் ஊரிலிருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளையில் புறப்பட்டுள்ளார். வழியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நெல் பயிரிடும் வயலுக்குள் பாய்ந்துவிட்டது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வயலில் பாய்ந்ததால் ராமருக்கு கன்னம் கால் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு […]
பாம்பு கடித்து பெண் சாவு
களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில் அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே […]
சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் சங்கரன்கோவிலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் செல்ல முடிவெடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ்குமார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த வணிக வளாகம் முன் கார் நிறுத்தி அதிலிருந்து இறங்கிய வந்த ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி கண்முடித்தனமாக சுட தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 3,399 பேருக்கு […]
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் […]
நான்கு மாதமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த […]
இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]
கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் […]
தூத்துக்குடி அருகே ஆசிரியர்களின் கொடுஞ்செயலால் விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை அடுத்த செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பேச்சியம்மாள். அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக […]
கடலூரில் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று செடி கொடிகளில் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிணத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என்று விசாரிக்கையில், அவர் சேலம் மாவட்டம் […]
திருப்பத்தூரில் மருத்துவரிடம் செல்போனில் பேசிக் கொண்டே செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் சேய் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆரீஃ ப் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி பரிதா என்பவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே பரிதா உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் அன்று மருத்துவமனையில் […]
ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர் ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் […]
திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா கடந்த 25ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேஜல் சர்மா குறித்த கூடுதல் விவரங்களை இந்த புகைப்பட செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா. மும்பையில் வாடகை குடியிருப்பில் தோழியுடன் வசித்துவந்தார் பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி […]
கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா […]
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100யை தாண்டி இருக்கிறது, ஒரு புறம் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க சீன அரசு போராடி வரும் நிலையில், மறுபுறம் கட்டுக்கடங்காமல் உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது. திங்களன்று என்று ஒரே நாளில் மட்டும் 1300 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலால் இதுவரை 106 பேர் உயிரிழந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் […]
இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4 ஆயிரத்து 359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். ஹூக்கான் நகரில் வசித்து வந்த இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பரவ வில்லை என்று […]
கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெர்ஹூக்கான் என்ற இடத்தில் விமலாதித்யா மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியத்தில் மாணவிகள் சிலர் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒத்திகையில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜித்தா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அம்மாணவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்றபோது மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக சக […]
திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில் வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து […]
மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய போது இளைஞர் ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் மரணடைந்ததால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும், பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே இதற்கு தடை விதித்துள்ளது. […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார். பொங்கல் […]
விழுப்புரம் அருகே பள்ளி வேன் மோதி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கம்பம் தொகுதியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி தங்கம். இவர்கள் இருவருக்கும் வினோதினி கிருத்திக்க்ஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வினோதினி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கிருத்திக்க்ஷா ஒரு வயது பெண் குழந்தை. இந்நிலையில் வினோதினியை பள்ளிக்கு கூட்டி செல்ல தனியார் பள்ளி வாகனம் அவரைக் கூட்டிச் […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]
வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கே வி குப்பம் மேல்மாயில் பகுதியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காளை விடும் விழா நடைபெறும். இந்த விழாவில் பல இளைஞர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இவ்வாண்டும் மயிலார் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட […]
திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும், மேலும் சளி முற்றி […]