தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது உயிரிழந்தவர்களின் விகிதம் 1.238% ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று […]
Tag: deathtoll
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுமார் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் ஆவர். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் முழு ஊரடங்கு அங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 41, காஞ்சிபுரத்தில் 10 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, தேனியில் 2 பேர், கடலூரில் 3 பேர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியில் ஒருவர் என […]
நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் இதுபோன்று உயர்ந்ததில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,409 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த […]
தமிழகத்தில் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15க்கும் மேற்பட்டதாகவே உள்ளது. இறப்பு விகிதம் 0.90% ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்து 38,716 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 […]